ஜோதிடம் பார்ப்து பார்ட் டைம்.. ஃபுல் டைம் வேறலெவல்.. உசிலம்பட்டியையே உலுக்கிய பெண்கள்
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஜோதிடம் பார்ப்பது போல வந்து வீடுகளை நோட்டமிட்ட பெண்கள், ஒரு சிறுமியை ஏமாற்றி வீட்டில் இருந்த ரூ.8 லட்சம், 10 பவுன் நகைகளையும் திருடிய நிலையில, சிசிடிவி காட்சி அடிப்படையில் கைது செய்யப்பபட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பங்களாமேடு பகுதியில் வசித்து வருபவர் போதுராஜ் (வயது 45). இவருடைய வீட்டிற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி ஜோதிடம் பார்ப்பது போன்று நடித்து நான்கு பெண்கள் வந்துள்ளனர்.

வீட்டில் தனியாக இருந்த சிறுமியை ஏமாற்றியை ஏமாற்றிவிட்டு, பீரோவில் இருந்த ரூ.8 லட்சம் மற்றும் 10 பவுன் நகையை 4 பெண்கள் திருடி சென்றுள்ளனர் . இந்த சம்பவம் தொடர்பாக போதுராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி நகர் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பெண்களையும் தேடி வந்தனர்.
இந்த நிலையில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் வேறு ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் கைதிகளாக இருப்பது உசிலம்பட்டி போலீசுக்கு தெரியவந்தது. இதன் அடிப்படையில், உசிலம்பட்டி துணை சூப்பிரண்டு நல்லு தலைமையிலான போலீசார் கடலூர் சிறையில் இருந்த 4 பெண்களில் ஈரோட்டை சேர்ந்த கவிதா (28), முத்தம்மாள் (38), மீனாட்சி (30) ஆகிய 3 பெண்களை கைது செய்தனர்.
அவர்களை உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் முன்பு ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி மகாராஜன், 3 பெண்களையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில் பின்னர் 3 பேரையும் மீண்டும் கடலூர் சிறைக்கு போலீசார் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications