சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு தரமில்லாத அரிசியை கொட்டி ஆரத்தி எடுத்த பெண்கள்
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க.,வேட்பாளரான எம்.எல்.ஏ., மாணிக்கத்திற்கு தரமற்ற அரிசியால் ஆரத்தி எடுத்து பெண்கள் ஷாக் கொடுத்தனர்.
தரமற்ற அரசியை வைத்து சூடம் ஏற்றி ஓட்டு சேகரிக்க வந்த , மாணிக்கம் எம்.எல்.ஏ.,விடம் பெண்கள் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதை சற்றும் எதிர்பார்க்காத எம்எல்ஏ அதிர்ந்து போனார்,
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளராக மாணிக்கம் எம்.எல்.ஏ மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் எப்படியும் வென்றுவிடலாம் தீவிரமாக வேலை செய்து வருகிறார்.

பிரச்சாரம்
மாணிக்கம் எம்.எல்.ஏ அலங்காநல்லுார் ஒன்றியம் குமாரம் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது குமாரம், மணியஞ்சி, தண்டனை உள்ளிட்ட கிராமங்களில் அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி பெண்கள் வழி நெடுகிலும் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

சூடம் ஏற்றினர்
குமாரம் பகுதியில் மாணிக்கம் எம்.எல்.ஏ வாக்குச் சேகரிக்கச் சென்றார். அப்போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மோசமாக உள்ளதைச் சுட்டிக் காட்டும் வகையில் தட்டில் ரேஷன் அரிசியை பரப்பி எம்எல்ஏவுக்கு சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

நடவடிக்கை எடுப்பேன்
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று உள்ளதாகவும், இனியாவது தரமான அரிசியை வழங்குமாறும் அவரிடம் சில பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் சிரித்துக்கொண்டே 'தரமற்ற அரிசி குறித்து என் கவனத்திற்கு வரவில்லை.உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என சமரசம் செய்தபடி சிரித்துக்கொண்டே அங்கிருந்துபுறப்பட்டு சென்றார்.

ஷாக் தந்த எம்எல்ஏ
பின்னர் மாணிக்கம் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். யாரும் எதிர்பார்க்காத விதமாக ரவீந்திரநாத்குமாரின் காலில் விழுந்து மாணிக்கம் எம்எல்ஏ ஆசிர்வாதம் பெற்றார். இந்த காட்சி அங்குள்ளவர்களை அதிர்ச்சி அடையவைத்தது. உடனடியாக ரவீந்திரநாத் அவரை தூக்கி வேண்டாம் என்று தடுத்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications