கடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்

தற்கொலைக்கு முயன்ற இளைஞன் சிகிச்சை பெற்று வருகிறார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தன் காதலி மரணத்திலும் கூடவே வருவார் என்று நினைத்து சென்ற காதலனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.. விஷத்தை குடித்தும்.. தண்ணீரில் குதித்து தற்கொலையே செய்து கொண்ட நிலையிலும், காதலன் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்று தேனியில் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையை சேர்ந்தவர் விஜய். இவருக்கு வயது 24 ஆகிறது. திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக உள்ளார். இவர் நிவேதா என்ற 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

பெண் மைனர் என்பதால், இருவரின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவும், எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அதனால் இருவரும் ஓடிப்போய் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்படி, கடந்த மே 2-ம் தேதி வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

தற்கொலை

தற்கொலை

இதனால் நிவேதாவின் பெற்றோர் போடி போலீசில் புகார் செய்தனர். அதன்படி மே-6ம் தேதி விஜய்யை கைது செய்து, போக்சோவிலும் அடைத்தனர். ஆனால் ஆக. 14 ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார் விஜய். வீட்டிலும் எதிர்ப்பு, வெளியேவும் வாழ விடவில்லை என்பதால், காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தனர். அதற்காக நேற்று முன்தினம் மாலை வைகை அணைக்கு சென்றனர்.

கைவிட்டார்

கைவிட்டார்

கையில் தயாராக விஜய் விஷத்தை கொண்டு வந்திருந்தார். அதை நிவேதாவை குடிக்குமாறு சொன்னார். ஆனால் நிவேதா தயங்கினார்.. விஜய்யோ மடக்கென விஷத்தை குடித்துவிட்டார். பிறகு காதலியின் கையை பிடித்துக் கொண்டு அணையில் இருந்து குதிக்க தயாரானார். அப்போதும் நிவேதா தயங்கினார். குதிக்கும் நேரம், கைப்பிடியை விட்டுவிட்டார் நிவேதா. அதனால் விஜய் மட்டும் அணையில் குதித்துவிட்டார்.

அட்மிட்

அட்மிட்

இதைப்பார்த்து நிவேதா அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணிக்குள் குதித்து விஜய்யை தேடினர். ஆனால் கிடைக்கவே இல்லை. இதனால் போலீசில் சொல்லவும், தீயணைப்பு வீரர்களுடன் விரைந்து வந்தது. இரவெல்லாம் தேடி, நேற்று காலையெல்லாம் தேடியும் விஜய் கிடைக்கவே இல்லை. மீட்பு படையினரும் விஜய்யை சளைக்காமல் தேடி கொண்டே இருந்தனர். ஆனால் விஜய், தேனி அரசு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருப்பதாக தகவல் கிடைக்கவும், போலீசார் அங்கு ஓடினார்கள்.

உயிர் மேல் ஆசை

உயிர் மேல் ஆசை

அங்கு விஜய் படுக்கையில் படுத்து கொண்டிருந்தார். இதை பற்றி போலீசார் கேட்டதற்கு, "என்கூட சாக வருவாள் என்று நினைத்துதான் விஷம் குடிச்சேன். அணையில் இருந்தும் குதிச்சேன். ஆனால் என்னை கைவிட்டு விட்டாள். எனக்கு உயிர்பிழைக்கணும்னு தோணுச்சு. தண்ணிக்குள்ள அரை மயக்கத்தில இருந்த நான் நீச்சலடிச்சு கரைக்கு வந்துட்டேன். கரையில் இருந்தவங்ககிட்ட என்னை காப்பாத்தும்படி கெஞ்சவும், என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்"என்றார்.

தேனி மக்கள்

தேனி மக்கள்

இதுகுறித்து வைகை அணை போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிர் மேல்ஆசை வைத்து விஜய் நீந்திவந்து கரை சேர்ந்த சம்பவமும், சடலம் இருப்பதாக நினைத்து, அதை கைப்பற்ற 2 நாள் வீரர்கள் பாடுபட்ட சம்பவமும் தேனி மக்களுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை தந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+