சாப்பாட்டில எங்கடா கறியை காணோம்.. தகராறு செய்த அக்கா மகனை குத்தி கொன்ற மாமன்!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அக்கா மகனை குத்தி கொன்ற மாமன்!-வீடியோ
மதுரை: "டேய்... எங்கடா சாப்பாட்டில கறியை காணோம்" என்று கல்யாண வீட்டில் தகராறு செய்ததால், அக்கா மகனையே கொடூரமாக குத்திக் கொலை செய்தார் தாய் மாமன்!
மதுரை வாடிப்பட்டி அருகே சாணம்பட்டி, குரங்குதோப்பு பகுதியை சேர்ந்தவர் பிரபு. கடந்த ஞாயிறு அன்று தனது தாய்மாமன் வீட்டில் நடந்த கல்யாணத்துக்கு சென்றிருந்தார்.

அப்போது கல்யாணம் முடிந்து பிரபு சாப்பிட சென்றார். அப்போது அவரது இலையில் கறி பரிமாறப்படவில்லை. "எங்கடா எனக்கு கறி வைக்கல" என்று தகராறில் ஈடுபட்டார்.

இதன்பிறகு அங்கிருந்து கோபித்து கொண்டு கல்யாண வீட்டிலிருந்து வெளியே வந்துவிட்டார். அருகிலுள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்து பிரபு பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பிரபுவின் மாமா கார்த்திக் அங்கு வந்து பிரபுவை சரமாரியாக வயிற்றில் குத்தி தப்பிவிட்டார்.

ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரபுவை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். மருமகனை கொன்ற தாய்மாமன் இப்போது எஸ்கேப்.. அதனால் தப்பியோடிய மாமா கார்த்திக்கை வாடிப்பட்டி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications