மடப்புரம் இளைஞர் லாக் அப் மரணம்.. உறவினர்களிடம் விசாரிக்கும் மாஜிஸ்திரேட்.. என்ன நடந்தது?
துரை: சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்து சென்ற அஜித் குமார் என்ற இளைஞர் மரணம் அடைந்தது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ஏற்கனவே 6 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இளைஞர் அஜித் குமாரின் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மதுரை அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித் குமார். 28 வயதாகும் இவருக்கு, 2 மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமி மற்றும் நிக்தா ஆகிய இருவரும் மடப்புரம் கோவிலுக்கு வந்துள்ளனர். அப்போது அஜித் குமாரிடம் சாவியை கொடுத்து பார்க்கிங் செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் அஜித் குமாருக்கு கார் ஓட்ட தெரியாது என்பதால், வேறொருவரின் உதவியுடன் காரை ஓரமாக பார்க் செய்துள்ளார். இதன்பின் தரிசனம் முடித்து வெளியே வந்த சிவகாமி, நிக்தா இருவரும் காரில் இருந்த 10 சவரன் நகையை காணவில்லை என்று கேட்டுள்ளனர். இதன்பின் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவலாளி அஜித் குமாரை போலீசார் விசாரித்துள்ளனர்.
இதன்பின் அஜித் குமாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஜித் குமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக காவல் நிலையம் முன்பாக உறவினர்கள் குவிந்திருக்கின்றனர். தொடர்ந்து அஜித் குமார் விசாரிக்கப்பட்ட போது, காவல் நிலையத்தில் இருந்த 6 போலீசாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இளைஞர் அஜித் குமாரின் மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாஜிஸ்திரேட் விசாரணை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காவல்துறை விசாரணையின் போது தாக்கியதாலேயே இளைஞர் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் உறவினர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications