கூழ் காய்ச்சும் போது காக்கா வலிப்பு..! கொதிக்கும் அண்டாவில் அப்படியே விழுந்த இளைஞர் பலி! ஷாக் வீடியோ
மதுரை: மதுரையில் பழங்காநத்தம் பகுதியில் கூழ் காய்ச்சும் போது இளைஞருக்குக் காக்கா வலிப்பு வந்தது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு கோயில்கள் ஆடி மாதம் என்றாலே களைகட்டிவிடும். கோயில்களில் சிறப்புப் பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும்.
மேலும், கோயில்களில் கூழ் காய்ச்சும் நிகழ்வுகளும் நடக்கும். மதுரையில் அப்படியொரு நிகழ்வில் நடந்த விபத்து குறித்த சிடிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த மேலத்தெரு முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமை அன்று பல்வேறு சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதிகாலை முதலே முத்து மாரியம்மன் கோவிலில் அப்பகுதி மக்கள் அதிகமாக கூடினர். முத்து மாரியம்மனை பொதுமக்கள் வரிசையாக நின்று தரிசித்து வந்தனர். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது.

கூழ் காய்ச்சும் நிகழ்வு
அன்றைய தினம் கோயில் அருகே மிகப் பெரிய அண்டாக்களில் கூழ் காய்ச்சும் பணிகள் நடைபெற்று வந்தது. சுமார் 6 பேர் இந்த பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்கின்ற முருகனும் கூழ் காய்ச்ச உதவிக் கொண்டு இருந்தார். அங்குத் தேவையான உதவிகளை அவர் செய்து கொண்டு இருக்கும் போது, அவருக்கு திடீரென காக்கா வலிப்பு ஏற்பட்டு உள்ளது.

தடுமாறிய முருகன்
இதனால் திடீரென நிலை தடுமாறிய அவர், அப்படியே கூழ் காய்ச்சிக் கொண்டு இருந்த மிகப் பெரிய அண்டாவில் விழுந்துள்ளார். இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து, அவரை வெளியே மீட்க முயன்றனர். இருப்பினும், அண்டாவில் கூழ் கொதித்துக் கொண்டு இருந்ததால், அவரை எளிதாக வெளியே உடனே வெளியே எடுக்க முடியவில்லை.

அண்டாவில் விழுந்தார்
மிகவும் கஷ்டப்பட்டு அங்கிருந்தவர்கள், அவரை அண்டாவில் இருந்து எடுக்க முயல்கின்றனர். இருப்பினும், காக்கா வலிப்பு காரணமாக அந்த நபர் மீண்டும் மீண்டும் அந்த கொதிக்கும் கூழ் அண்டாவிலேயே விழுகிறார். நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், அந்த நபரை அண்டாவில் இருந்து ஒரு வழியாகப் பொதுமக்கள் வெளியே கொண்டு வந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.

சிசிடிவி காட்சிகள்
இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். கொதிக்கும் கூழில் விழுந்ததால் ஏற்பட்ட காயம் காரணமாகவே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications