தேர்தல் நேரத்தில் மதுரையில் பயங்கர படுகொலை.. நடு ரோட்டில் இளைஞர் வெட்டிக் கொலை
Recommended Video

மதுரை: மதுரையில் மக்கள் நடமாட்டம் உள்ள தெற்கு மாரட் வீதியில் நடு ரோட்டில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் நேற்று தெற்கு மாரட் வீதியில் சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடூரமாக வெட்டி கொலை செய்யும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளதா என காவல்துறையினர் அருகிலுள்ள கடைகளில் பார்த்தனர். மேலும் கொலை செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் முன் விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கேணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெட்டிய கொலை கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications