Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபயர்லாம் எங்களுக்கு ஸ்ப்ரே மாதிரி..என்னங்க இப்படியெல்லாமா விளையாடுவீங்க! கர்நாடகாவில் தீ எறி விழா!

Subscribe to Oneindia Tamil

மங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மங்களூர் அருகே இருக்கும் துர்கா பரமேஸ்வரி ஆலயத்தில் தீ பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெற்றது. தீப்பந்தங்களை எறிந்தாலும் யாருக்கும் தீக்காயம் ஏற்படாது என நம்பிக்கையுடன் கூறுகின்றனர் அங்கு வழிபாடு நடத்தும் பக்தர்கள்.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல வினோத திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

Fire Throwing Festival is celebrated in Karnataka

ஒவ்வொரு பகுதிக்கும் தனி சிறப்பு கொண்ட ஒரு வழிபாட்டு முறை இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை பூக்குழி இறங்குதல், அழகு குத்துதல், விளக்கமாறால் அடித்தல், தலையில் தேங்காய் உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான வழிபாட்டு முறைகள் இருக்கிறது.

வித்தியாசமான திருவிழா: அப்படி கர்நாடக மாநிலத்திலும் ஒரு வித்தியாசமான திருவிழா பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தின் மங்களூர் அருகே இருக்கும் கட்டில் என்ற கிராமத்தில் தான் இப்படி ஒரு வினோத திருவிழா பல ஆண்டுகளாக அங்கு இருக்கும் பக்தர்களால் நடத்தப்பட்டு அந்த கிராமத்தில் நடுவே நந்தினி என்ற ஆறு பாய்கிறது.

துர்கா பரமேஸ்வரி கோவில்: அந்த ஆற்றில் நடுவே அமைந்திருக்கிறது சுமார் 1000 ஆண்டு பழமையான துர்கா பரமேஸ்வரி கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவானது விமர்சையாக கொண்டாடப்படும். இந்த விழாவில் மங்களூர் மட்டுமல்லாது அட்டுர், குளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வது வழக்கம். இந்த விழாவில் முக்கியமான ஒரு நேர்த்திக்கடன் இருக்கிறது.

தீப்பந்தம் எரியும் திருவிழா: அதாவது விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் தீப்பந்தங்களை கொளுத்தி இரு பிரிவாக பிரிந்து ஒருவர் மீது ஒருவர் வீசி எறிவார்கள். அப்படி பார்க்கும் பொழுது ஏதோ கலவர பூமியில் காத்து வாங்க வந்தது போல அங்கும் இங்குமாய் தீப்பந்தங்கள் சிதறி விழும். இரவில் பார்ப்பதற்கு மிகவும் பயங்கரமாக இருக்கும் இந்த வழிபாட்டு முறை. ஆனால் அவ்வாறு தீப்பந்தங்களை ஒருவர் மீது ஒருவர் வீசும் போது தங்களுக்கு நல்லது நடக்கும் எனவும் யாருக்கும் தீக்காயமும் ஏற்படாது என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை.

தீக்காயம் ஏற்படவில்லை: இந்த ஆண்டும் வழக்கம் போல துர்கா பரமேஸ்வரியை வழிபட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக காவி வேட்டி அணிந்து கோயில் முன்பு உள்ள மைதானத்தில் திர்ண்டனர். துர்கா பரமேஸ்வரிக்கு நடந்த சிறப்பு வழிபாட்டிற்கு பிறகு பந்தங்களை தீப்பற்ற வைத்து ஒருவர் மீது ஒருவர் வீசிக்கொண்டனர். அந்தப் பகுதியே ஒளி வெள்ளமாகக் காட்சி அளித்தது. இருந்த போதும் கூட யாருக்கும் தீக்காயம் ஏற்படவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+