சபாஷ்..! கர்நாடக ஆரஞ்சு வியாபாரிக்கு பத்மஸ்ரீ.. 20 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கிராமத்திற்கு செய்த பேருதவி
மங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த ஆரஞ்சு வியாபாரியான ஹரேகலா ஹஜப்பா என்பவருக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ விருது நேற்று வழங்கப்பட்டது.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி தலைநகர் டெல்லியில் நேற்றும் இன்றும் வழங்கப்பட்டது. பல தங்களில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது கர்நாடகா மாநிலம் மங்களூருவை சேர்ந்த ஆரஞ்சு வியாபாரி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு வியாபாரி
66 வயதான ஆரஞ்சு வியாபாரியான ஹரேகலா ஹஜப்பா மங்களூருவில் உள்ள ஹரேகலா- நியூபட்பு கிராமத்தில் சொந்த செலவில் பள்ளியைத் திறந்து கிராமப்புற கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக இந்த விருதைப் பெற்றார். இப்பள்ளியில், தற்போது, அக்கிராமத்தைச் சேர்ந்த, 175 தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 1977 ஆம் ஆண்டு முதல் மங்களூரு பேருந்து நிலையத்தில் ஆரஞ்சு பழங்களை விற்று வரும் ஹஜப்பா படிக்காதவர்.

என்ன காரணம்
இருப்பினும், தான் பெறாத கல்வியைத் தனது கிராமத்தில் இருக்கும் அனைவரும் பெற வேண்டும் என்ற முனைப்பில் அவர் தனது சொந்த செலவில் பள்ளியைக் கட்டியுள்ளார். பள்ளி கட்ட வேண்டும் என்ற முனைப்பு இவருக்கு 1978ஆம் ஆண்டு முதன்முதலில் ஏற்பட்டுள்ளது. அப்போது வெளிநாட்டவர் ஒருவர் ஆரஞ்சு பழத்தின் விலையை இவரிடம் கேட்டுள்ளார். இருப்பினும், மொழி புரியாததால் இவரால் பதில் சொல்ல முடியவில்லை. இதே நிலைக்குத் தனது கிராமத்தைச் சேர்ந்த அடுத்த தலைமுறையினர் தள்ளப்படக் கூடாது என்பதற்காகப் பள்ளிக் கூடத்தைக் கட்ட முடிவு செய்துள்ளார் இவர்

20 ஆண்டுகள்
இருப்பினும், பள்ளி கட்ட வேண்டும் என்ற ஹரேகலா ஹஜப்பாவின் ஆசை அவ்வளவு சீக்கிரம் ஒன்றும் நிறைவேறவில்லை. ஆரஞ்சு பழங்களை விற்று, பணத்தை சிறுக சிறுக சேமித்த இவரால் 20 ஆண்டுகள் பின்னரே பள்ளியைக் கட்ட முடிந்துள்ளது. முதலில் 28 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இப்போது 175 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த காலத்தில் இவரது முயற்சியை ஊக்குவிக்க அளிக்கப்பட்ட விருதுகளில் கிடைத்த பணத்தையும் கூட ஹரேகலா ஹஜப்பா பள்ளியைக் கட்டவே செலவழித்துள்ளார்.

அடுத்த இலக்கு
தனது கிராமத்தில் உள்ளவர்கள் பயன் பெறும் வகையில் கூடுதலாகப் பள்ளிகளையும் புதிய கல்லூரி ஒன்றையும் தொடங்குவதே தனது அடுத்த இலக்கு எனப் பூரிக்கிறார் இந்த 66 வயது முதியவர். தனது இந்த முயற்சிக்குப் பலரும் நன்கொடை அளித்துள்ளதாகவும் அத்துடன் விருதுகளில் கிடைத்த பணத்தைச் சேர்த்து நிலத்தை வாங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், +1, +2 மாணவர்களுக்கு உதவும் வகையில் மேல்நிலைப் பள்ளியைத் தனது கிராமத்திற்குக் கட்டித் தர வேண்டும் எனப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பத்மஸ்ரீ ஹரேகலா ஹஜப்பா
தனது கிராமத்தில் உள்ள அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற உன்னத இலக்குடன் செயல்பட்டு வரும் ஹரேகலா ஹஜப்பாவுக்கு பலரும் உறுதுணையாக உள்ளனர். இவருக்குக் கடந்த 2020 ஜனவரி மாதமே பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும் அதற்குள் கொரோனா பரவல் உச்சமடையவே விருதுகள் வழங்கப்படவில்லை. கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தான் விருதுகள் வழங்கப்பட்டன.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications