என்னமோ நடக்குது! ஆர்எஸ்எஸ் தலைமைக்கு கால் செய்த நிதின் கட்கரி? பாஜகவில் பூகம்பம்?அப்போ பிரதமர்?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறாத நிலையில் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியின் உதவியுடன் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. பாஜக என்டிஏ கூட்டணி 353 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 52 இடங்களில் வென்றது. இந்த நிலையில்தான் இன்று வாக்கு எண்ணிக்கை செய்யப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. 543 தொகுதிகள் நாட்டில் உள்ளன. இதில் 272 தொகுதிகளில் வென்றால் ஆட்சியை பிடிக்க முடியும்.

இப்படிப்பட்ட நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜக தனியாக 240 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மோடி பிரதமரா? : 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறாத நிலையில் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியின் உதவியுடன் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பின் வரும் காரணங்கள் உள்ளன.
1. பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர்.
2. பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.
3, இவர்கள் மோடியை பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டும். சமயங்களில் இவர்கள் தங்களுக்கு பிரதமர் பதவியை கூட கேட்கலாம். முக்கியமாக நிதிஷ் பிரதமர் பதவிக்கு ஆசை படலாம்.
( அயோத்தியிலேயே தோல்வி! ம்ம்.. ஜெய் ஸ்ரீராம் சொல்லாமல்.. ஜெய் ஜெகன்நாத்துக்கு மாறிய மோடி! இதான் காரணம் )
4. இது முழுக்க முழுக்க மோடியை முன்னிறுத்திய மோடி கேரண்டி தேர்தல். அதில் பாஜக தோற்ற நிலையில் பாஜகவில் மோடியை பிரதமராக்க பாஜக விரும்புமா என்ற கேள்வி உள்ளது. முக்கியமாக ஆர்எஸ்எஸ் அனுமதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் திட்டம்: இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. பிரதமர் மோடி மற்றும் சில டாப் தலைவர்களுக்கு இடையிலான மோதல் பாரதிய ஜனதா கட்சிக்குள் ஏற்பட்டு உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக யோகி ஆதித்யநாத், நிதின் கட்கரி மற்றும் சிலர் பிரதமர் மோடி மீது அப்செட்டில் இருப்பதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கியமாக பாஜகவில் மோடி-ஷா மற்றும் நிதின் கட்கரிக்கு இடையே கடுமையான கருத்து வேறுபாடு உள்ளதாக பாஜக தேசிய வட்டாரங்கள் கூறுகின்றன.
அதோடு மோடியை விரும்பாத ஆர்எஸ்எஸ் தீவிர ஆர்எஸ்எஸ் நிர்வாகியான கட்கரியை வளர்த்துவிடுவதற்கான பணிகளையும் செய்கிறதாம். பாஜக பெரும்பான்மை பெறாமல் என்டிஏ ஆட்சி அமைய வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதால் கட்கரியை பிரதமராக்கவும் ஆர்எஸ்எஸ் காய் நகர்த்தி வருகிறதாம்.
கட்கரி அரசியல் தாண்டி சிறந்த பிஸ்னஸ் மேன் வேறு. கட்கரி ஆர்எஸ்எஸ்ஸின் "பைனான்ஸ்" தூண் மற்றும் கருவூலமாகவும் இருந்து வருகிறாராம் . அவர் மீதான தாக்குதல் ஆர்எஸ்எஸ்ஸின் பொருளாதாரம் மீதான நேரடித் தாக்குதல் என்று பலர் நம்புகிறார்கள். கட்கரிக்கும் ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. அவர் பிரதமர் ஆனால் தங்களுக்கு நல்லது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கலாம்.
மோடியை விரும்பாத காரணத்தினாலேயே அவருக்கு தேர்தலில் ஆர்எஸ்எஸ் பெரிதாக வேலை பார்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுவே உத்தர பிரதேசத்தில் பாஜக சறுக்கவும் முக்கிய காரணம்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆர்எஸ்எஸ் - நிதின் கட்கரி இணைத்து ஏதாவது திட்டங்களை வகுக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்












Click it and Unblock the Notifications