மகாராஷ்டிராவில் 'செம்ம வேட்டை'.. பாதுகாப்பு படையினர் தாக்குதலில் 12 மாவோயிஸ்டுகள் பலி!
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான 'வேட்டை'யை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் (நக்சல்கள், நக்சலைட்டுகள்) 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஒடிஷா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, பீகார், மேற்கு வங்கம் என பல மாநிலங்களில் பழங்குடி மக்களைக் கேடயமாக பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தினர். தற்போது மாவோயிஸ்டுகள் மிகவும் சொற்பமான எண்ணிக்கையில்தான் நடமாடுகின்றனர்.

தற்போதைய நிலையில் சத்தீஸ்கரில் தலைதூக்கிய மாவோயிஸ்டுகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு வருகின்றனர். சத்தீஸ்கரில் மட்டும் கடந்த 7 மாதங்களில் 138 மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு சவாலாக இருப்பது பஸ்தார் பிராந்திய பாதுகாப்புப் படைதான். பஸ்தார் மண்டல ஐஜியாக இருப்பவர் தமிழரான சுந்தரராஜ். இவரது தலைமையின் கீழ் மாவோயிஸ்டுகள் அழிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கட்ச்ரோலி பகுதியில் மாவோயிஸ்டுகளைத் தேடும் நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினர் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து கடுமையான பதிலடி தரப்பட்டது.
கட்ச்ரோலியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே சுமார் 6 மணிநேரத்துக்கும் மேலாக கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 12 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இவர்களில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தளபதி மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார். எஞ்சிய 11 பேர் குறித்த அடையாளங்கள் வெளியாகவில்லை.
சுட்டு வீழ்த்தப்பட்ட மாவோயிஸ்டுகளிடம் இருந்து அதிநவீன துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. 3 ஏகே 47 ரக துப்பாக்கிகள், எறிகுழல்கள் உள்ளிட்ட 12 அதிநவீன ஆயுதங்கள் மாவோயிஸ்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படையினர் தரப்பில் சிலர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications