மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா: மருத்துவமனை தீ விபத்தில் 13 பேர் உடல் கருகி பலி - மோடி ரூ.2 லட்சம் நிவாரணம்

மகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனா சிகிச்சை மையத்தில் கோரம்: ஐசியூவில் தீ விபத்து… 13 பேர் பரிதாப பலி!

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. ஒரே நாளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 24 பேர் உயிரிழந்தனர்.

    13 Covid-19 Patients Die in Maharastra Hospital Fire; PM Modi Announces 2 Lakh Ex-gratia

    இன்றைய தினம் பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

    கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகவும் பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    PM Modi has approved an ex-gratia of Rs. 2 lakh each from PMNRF for the next of kin of those who have lost their lives due to the hospital fire in Virar, Maharashtra. Rs. 50,000 would be given to those seriously injured.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X