திமுக குடும்பத்தில் புதிய புயல்! தவெகவில் இணையும் அழகிரி மகள் கயல்விழி? மேயர் நாற்காலிக்கு ஸ்கெட்ச்!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், தினமும் ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில், தற்போது திமுகவின் 'கலைஞர் குடும்பத்தில்' இருந்து புதிய புயல் ஒன்று கிளம்பியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, முதல்வர் விஜய்யின் தவெகவில் இணையப் போவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் வேகமாக பரவி வருகின்றன.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில், திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கெடுக்காத நிலையில், மு.க.அழகிரியின் மகள் கயல்விழி நேரில் கலந்துகொண்டது அனைவரையும் உற்றுநோக்க வைத்தது. பதவியேற்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கயல்விழி, "விஜய் சரித்திர சாதனையாளர். அவருடைய கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது" என்றார்.

மதுரையில் மு.க. அழகிரி நீண்ட காலமாகவே அரசியலில் ஒதுங்கியிருந்தாலும், அவரது தீவிர விசுவாசிகள் இன்னும் தென்மாவட்டங்களில் கணிசமாக உள்ளனர். ஸ்டாலின் மீதான தங்களின் அதிருப்தியைக் காட்ட, அழகிரி ஆதரவாளர்கள் பலரும் கயல்விழியை மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரவிருக்கும் சூழலில், கயல்விழியின் தவெக என்ட்ரிக்கு பின்னால் ஒரு மாபெரும் 'மதுரை கணக்கு' இருப்பதாகக் கூறப்படுகிறது. மதுரை மாநகராட்சி மேயர் பதவியைக் கயல்விழி குறி வைத்துள்ளதாகத் தெரிகிறது. மதுரை மண்ணில் அழகிரி செல்வாக்கையும், தவெகவுக்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் மகளிர் ஆதரவையும் இணைத்தால், எளிதாகக் வெல்லாம் என்று கணக்கு போட்டுள்ளனர்.
கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே, திராவிடக் கோட்டைக்கு சவால் விட்டு எழுந்துள்ள தவெக-வில் இணைந்தால் அது திமுகவுக்குப் பின்னடைவாக அமையும். கயல்விழியின் முடிவுக்கு பின்னணியில் மு.க.அழகிரியும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அண்மையில் அவரது ஆதரவாளர்களான மன்னன், எஸ்ஸார் கோபி ஆகியோர் அதிமுகவில் ஐக்கியமாகினர்.
அதேபோல் முன்னாள் அமைச்சர் மூர்த்தியை தோற்கடித்த கார்த்திகேயன் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்தவர் தான். இவபர் மூலமாக கயல்விழி தவெகவில் இணைய காய்களை நகர்த்தி வருகிறார். கயல்விழியின் இந்த முடிவு மதுரையில் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.
-
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
“ஆதவ் அர்ஜுனாவுக்கு தொடர்பா? தைரியம் இருந்தா சட்டரீதியாக திமுக நிரூபிக்கட்டும்”.. தவெக பதிலடி! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
நாளை திடீரென டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. பிரதமர் மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. என்ன காரணம் -
சாதனையா? வேதனையா? விஜய் முதல்வராகி 30 நாள்! அதிரடி ஆக்ஷன்களும்.. அரசின் முன் நிற்கும் சவால்களும்! -
வெட்கமாக இல்லையா விஜய் அரசே? ஆன்லைன் பத்திரப்பதிவு சேவை குறித்து திமுக விளக்கம் -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
“வல்லாரை கீரை சாப்பிடுங்க விஜய்”.. முதல்வருக்கு தபாலில் அனுப்ப வந்த 3 பேர் கைது!












Click it and Unblock the Notifications