சைலெண்டாக வேலை பார்த்த ஈரான்.. சீனா - ரஷ்யா செய்த உதவி.. மீண்டும் தாக்குதல் நடத்த அஞ்சும் அமெரிக்கா!
வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து திடீர் தாக்குதல் நடத்த அமெரிக்காவில் விரிவான திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதேவேளையில், ஈரான் யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் தனது ராணுவ உற்பத்தி தொழிற்சாலைகளின் உற்பத்தி பணிகளை துவங்கியிருப்பதாகவும், தற்போது தாக்குதல் நடத்தினால் அனைத்து முனைகளில் இருந்தும் தாக்குதல் நடத்த ஈரான் தயாராக இருப்பதாக அமெரிக்க உளவு அமைப்புகள் டிரம்ப்-க்கு தகவல் தெரிவித்துள்ளன.
ஈரான் தற்காலிக போர் நிறுத்த காலம் துவங்கிய நாளில் இருந்து தனது ட்ரோன் உற்பத்தி தளத்தை முழுமையாக மீண்டும் தொடங்கியுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான ட்ரோன்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு உற்பத்தி வேகத்தை அதிகரித்துள்ளது. மேலும், ஈரானின் ஏவுகணை ஏவும் தளங்களில் மூன்றில் இரண்டு பங்கு இப்போது செயல்பாட்டில் உள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் தற்போது, "ஈரான் எங்களுடைய எதிர்பார்ப்புகளை விட மிக வேகமாக தனது ராணுவ உற்பத்தியை மீண்டு வருகிறது" என அதிர்ச்சி அடைந்துள்ளதாக அமெரிக்க பத்திரிக்கைகளிடம் தெரிவித்துள்ளனர். மேலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஏவுகணை மற்றும் ட்ரோன் பாகங்கள் அளித்து முக்கிய உதவிகளை வழங்கி வருவதாகவும் CNN தெரிவித்துள்ளது.
ஈரான் தரப்பில் கடந்த வாரமே கடந்த போரில் பல பாடங்களை கற்றதாகவும், அமெரிக்காவின் 42 விமானங்களை சுட்டு வீழ்த்தியது மூலம் எப்படி தாக்க வேண்டும் என அனுபவம் பெற்றதாகவும் தெரிவித்தது. இதுமட்டும் அல்லாமல் அடுத்த தாக்குதல் அமெரிக்கா, இஸ்ரேல் படைக்களுக்கு பல சர்ப்ரைஸ் உள்ளது என தெரிவித்தது.
இதேவேளையில் ஈரான் நாடு முழுவதும் புதிய நகரக்கூடிய (mobile) ஏவுகணை ஏவும் தளங்களை இடமாற்றம் செய்து தாக்குதலுக்கு எதுவாக வைத்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்ட கடற்படை ஏவுகணைகளை பெருமளவு அமைந்துள்ளது. சுமார் 33 தளங்களில் 30 தளங்கள் தற்போது ஆக்டிவ் ஆக உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஈரான் தனது ராணுவ தயாரிப்புகளை வேகப்படுத்தியுள்ள இந்த நிலையில், அமெரிக்கா - இஸ்ரேல் தரப்பில் திடீர் தாக்குதல் திட்டம் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அடுத்த தாக்குதலிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மேலும் அடுத்த போர் தாக்குதல் மத்திய கிழக்குப் பகுதியில் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது, காரணம் அடித்த தாக்குதல் சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் கலந்துக்கொள்ளும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இந்தப் பதற்றம் தொடருமானால், எண்ணெய் விலை மேலும் உயர்வு, உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications