மைனஸ் 30 டிகிரி குளிரில் 115 கி.மீ நடந்தே பயணம்.. தென் துருவத்தில் வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண்
மும்பை: இந்தியக் கடற்படை அதிகாரியின் மகளான 18 வயது காம்யா கார்த்திகேயன், தென் துருவத்திற்குப் பனிச்சறுக்கு சென்று வரலாறு படைத்துள்ளார். மிகவும் இளைய வயதில் இதைச் செய்த இந்தியப் பெண் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவர் எப்படி இந்தச் சாதனையைப் படைத்தார். அடுத்து அவரது சாகச பணம் எங்கே அமைகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் இளைஞர்கள் பலரும் செல்போனில் மூழ்கி இருந்தாலும் சிலர் ஊரே வியக்கும் வகையிலான சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். அப்படியொரு மகத்தான சாதனையைப் படைத்தவர் தான் காம்யா கார்த்திகேயன். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த காம்யா கார்த்திகேயன் இந்திய கடற்படை அதிகாரி ஒருவரின் மகளாவார்.

இவர் கடந்த டிசம்பர் 27 அன்று தென் துருவத்தை அடைந்தார். இதற்காக சுமார் 115 கி.மீ. தொலைவுக்கு அவர் நடந்தே சென்றுள்ளார். அதுவும் அங்கு மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். அடிக்கடி பனி சூறாவளியும் கூட ஏற்படும். இருப்பினும், அந்தக் கடுமையான சவால்களை எல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு அவர் அங்குச் சென்று சேர்ந்துள்ளார்.. தனக்குத் தேவையான பொருட்களை ஒரு மர சறுக்கு பலகையில் வைத்து, அதைத் தன்னுடைய கைகளாலேயே இழுத்துச் சென்று இந்தப் பயணத்தை அவர் முடித்துள்ளார்.
மத்திய அரசின் நேவி சில்ட்ரன்ஸ் பள்ளியின் (Navy Children School) முன்னாள் மாணவியான காம்யாவுக்கு இதுபோன்ற சாகசங்கள் புதிதல்ல. சிறு வயதில் இருந்தே அவர் இதுபோல பல்வேறு சாகசப் பயணங்களை அவர் மேற்கொண்டுள்ளார். மேலும், இந்த தென் துருவப் பயணத்தோடு அவரது சாகசம் முடிந்துவிடவில்லை.
உலகில் உள்ள ஏழு கண்டங்களின் உயரமான சிகரங்களையும், வட மற்றும் தென் துருவங்களையும் எட்டும் Explorers Grand Slam என்ற சாதனையை முடிப்பதே அவரது இலக்காகும். இந்தச் சாதனைப் பயணத்தின் ஒரு பகுதியாகவே அவர் இப்போது தென்துருவத்தை அடைந்துள்ளார்.
இந்த சாதனைப் பயணத்திற்காக காம்யா ஏற்கனவே உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரம் உட்பட ஏழு சிகரங்களை ஏறி இருக்கிறார். இதன் மூலம் உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்த மிக இளைய வயது இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், உலகிலேயே இந்த சிகரத்தை அடைந்த இரண்டாவது இளைய வயது பெண் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
The #IndianNavy congratulates Ms Kaamya Karthikeyan @KaamyaSahas, 18-year-old daughter of a naval officer and alumna of the Navy Children School #NCS, who scripted history yet again by becoming the youngest Indian and the second-youngest female in the world to ski to the… https://t.co/m8RgAVni52 pic.twitter.com/Dfrn2YljAe
— SpokespersonNavy (@indiannavy) December 30, 2025
காம்யாவை பாராட்டியுள்ள இந்தியக் கடற்படை, இது அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் சாதனை எனக் குறிப்பிட்டுள்ளது. அவரது அசாதாரண உறுதிப்பாடும், தைரியமும் இளைஞர்களையும் தங்கள் வரம்புகளைத் தாண்டிச் செயல்படத் தூண்டும் எனக் கடற்படை பாராட்டியுள்ளது.
ஏழு சிகரத்தையும் தென் துருவத்தையும் வெற்றிகரமாக அடைந்த அவர், அடுத்தகட்டமாக வட துருவத்தை அடைய இருக்கிறார். அதற்கான பயணத்தையும் விரைவில் தொடங்குகிறார். அதற்கும் கடற்படை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications