19 வயது பெண் கதறல்.. மொத்தம் 3 பேர்.. 2 மணி நேர இடைவெளியில் 3 முறை பலாத்காரம்.. மும்பை ஷாக் !
மும்பை: இரு வேறு இடங்களில் மொத்தம் 3 பேரால் ஒரு 19 வயதுப் பெண் 2 முறை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தால் மும்பையே அதிர்ச்சி அடைந்துள்ளது.
19ம் தேதி இரவு மும்பையின் நவி மும்பை பகுதியில் இந்த அட்டகாசம் நடந்துள்ளது. இந்த அக்கிரமத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போலீஸார் தற்போது பிடித்து விட்டனர். அதில் ஒருவன் ஆட்டோ டிரைவர்.

சம்பந்தப்பட்ட பெண் பிப்ரவரி 18ம் தேதி உறவினர்களுடன் கட்கோபர் ரயில் நிலையத்திலிருந்து ரயிலில் செல்வதாக இருந்தது. ஆனால் உறவினர்கள் ரயிலில் ஏறி விட்டனர். அப்பெண் லேட்டானதால் ரயிலை தவற விட்டு விட்டார். இதையடுத்து அடுத்த ரயிலில் அவர் ஏறினார். அங்கிருந்து தானே மாவட்டம் மும்ப்ரா ரயில் நிலையம் சென்றடைந்தார்.
இரவாகி விட்டதால் ரயில் நிலையத்திலேயே படுத்துத் தூங்க முடிவு செய்தார். அடுத்த நாள் இன்னொரு ரயிலில் ஏறி திவா நிலையத்தை அடைந்தார். அவரிடம் கையில் காசு இல்லாததால், பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண்ணை அணுகி, தனது மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்து இதை விற்க உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் பல இடங்களுக்குப் போயும் அவர்களால் அந்த மூக்குத்தியை விற்க முடியவில்லை.
இந்த நிலையில் இரவாகி விட்டதால், மீண்டும் திவா ரயில் நிலையத்தை நோக்கி இரவில் நடந்து வந்துள்ளார். அப்போது இரவு எட்டரை மணியளவில் அருகில் உள்ள ஹோட்டலுக்குப் போன அவர் அங்கிருந்த ஒரு ஆட்டோ டிரைவரிடம் அருகில் உள்ள ரயில் நிலையத்தில் தன்னை டிராப் செய்யுமாரு கேட்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவர் அவரை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
ஆனால் நவி மும்பை அருகில் உள்ள மஹாபே பகுதிக்கு கூட்டிச் சென்ற ஆட்டோ டிரைவர் அப்பெண்ணை பலாத்காரம் செய்தார். பின்னர் ஒரு கோவில் அருகே விட்டு விட்டு போய் விட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அப்பெண் இரவு 10 மணியளவில் அப்பகுதி வழியாக பைக்கில் வந்த இரு இளைஞர்களை நிறுத்தி உதவி கேட்டுள்ளார். அந்த இருவரும் பைக்கில் ஏற்றிக் கொண்டு கன்சோலி என்ற இடத்துக்கு கூட்டிச் சென்று அவர்களும் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த அக்கிரம சம்பவம் குறித்து போலீஸார் புகார் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தற்போது பலாத்காரம் செய்த 3 பேரும் சிக்கி விட்டனர்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications