2024 லோக்சபா தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சியமைப்பாளர்கள்? எண் கணிதம் என்ன சொல்லுது தெரியுமா?
2024 கூட்டு எண் 8 ஆகும், எனவே 17ஆம் தேதி பிறந்தவருக்கு தேசம் முழுக்க வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என நியூமராலஜியின் கணிப்புப்படி உறுதியாக தெரிகிறது
மும்பை:
2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி கணக்குகளை எதிர்கட்சிகள் இப்போதே போட ஆரம்பித்து விட்டன. பலருக்கும் பிரதமராகவேண்டும் என்ற கனவு உள்ளது. எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆளும் பாஜக அரசை வீழ்த்த முடியும். ஆனால் காணும் திசை எங்கும் வலிமையான எதிரிகளை காணவில்லை என்று பாஜக கூறி வருகிறது. வலிமையான கூட்டணி அமையுமா? 2024ஆம் ஆண்டு எண்களின் கூட்டுத்தொகையை பொறுத்து யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கணித்துள்ளார் பிரபல எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன்.
இந்தியாவில் ஒன்றுகூடி 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என்ற நினைப்பில் நிதிஷ்குமார் முதல் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி வரை இரவும் பகலும் கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் வெற்றி பெற முடியாத நிலையில்தான் உள்ளது அது ஏன் என்பதை காண்போம்.
அந்த காலத்தில் பெரியவர்கள் ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொன்னார்கள். ஜெயலலிதா என்ற ஒரு மாபெரும் சக்தி பல ஆண்டுகளாக மிகப்பெரும் அவருடன் இருந்ததற்கு காரணம் எம்எல்ஏ சீட்டோ அல்லது எம்பி சீட்டோ மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அவருடைய முழுமையான ஜாதகத்தை வாங்கி சென்று அலசி ஆராய்ந்துதான் சீட் கொடுப்பார்கள். அதுவே வெற்றிக்கு வழி வகுத்தது.

நிதிஷ்குமார்
பீகாரில் கடந்த 40 வருடங்களாக ஒரு தனித்துவமான அரசியல் தலைவராக வலம் வருபவர் தான் இன்றைய முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் மத்திய அமைச்சராகவும் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் இருந்துள்ளார். பீகாரில் லல்லு ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல அவலங்களை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் இதனால் அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக இவர் பக்கம் சாய்ந்தனர். மக்களின் செல்வாக்கு கிடைத்ததால் மிக எளிதாக தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பொழுது வரை முதலமைச்சராக இருந்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தற்பொழுது அரசியல் தளத்தில் தள்ளாடிக் கொண்டு உள்ளார் என்பதையும் அறிய வேண்டும் யாரை எதிர்த்து தொடர்ந்து முதல்வர் ஆனாரோ அவர்களிடமே சரண்டர் ஆனது (தேஜஸ்வி யாதவ்) பீகார் மக்களின் மனதில் இருந்து மெல்ல மெல்ல விலகி போய்விட்டார் என்பது தெளிவாகிறது.

யார் இந்த நிதிஷ்குமார்
நிதிஷ் குமார் என்ஐடியில் படித்து பட்டம் பெற்ற ஒரு நல்ல கல்வியாளர் பல புரட்சிகளை செய்தவர் லல்லுவிடம் பகைத்து கொண்டு பாஜகவின் அனுசரணையில் பலகாலம் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார் இடையில் பாஜகவை பகைத்துக்கொண்டு பழைய பகைவன் ஆகிய லல்லு விடம் சேர்ந்து இப்பொழுது ஆட்சியில் ஒட்டிக் கொண்டுள்ளது பீகாரில் உள்ளவர்களுக்கு சரியாகப் படவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாக பார்ட்னர்ஷிப் என்பது பல பேருக்கு ஒத்து வரவில்லை என்பதைக் காண்போம்.

முறிந்து போகும் நட்பு
உலகம் முழுக்க பல நிறுவனங்கள் பல பங்குதாரர்களை கொண்டு முதலில் ஆரம்பமாகும் தடாலடியாக திடீரென்று அவர்களுக்குள் நட்பு முறிந்து நீ பெரியவனா நான் பெரியவனா என்பதில் போய் முடிந்து அவர்கள் தங்களுடைய பார்ட்னர்ஷிப்பை துண்டித்து கொள்வார்கள் இதை நாம் பல பேரிடம் பார்க்கிறோம். இதே நிலைதான் நிதீஷ் குமாருக்கும் ஏற்படப்போகிறது.

எதிர்கட்சிகள் ஒன்றிணைவார்களா
நிதிஷ்குமார் நினைப்பதுபோல முக்கிய எதிர்க் கட்சிகளை இவர் ஒன்றினைக்க முடியாது, ஏனெனில் இவருக்கு சார்பில்லாத பல தலைவர்களின் பிறந்த தினங்கள் தான் இதற்கு காரணம், பொதுவாக தங்கத்துடன் இரும்பை ஒட்ட வைக்க இயலாது என்பது விஞ்ஞான விதியாகும், இதுபோல நிதிஷ்குமார் சொல்வதை மம்தா பானர்ஜியோ, சோனியா காந்தியோ, சந்திரசேகர் ராவோ தேஜஸ்வியோ கேட்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் பிறந்த தேதி இவருக்கு எதிர்ப்பை அளிக்கும் தேதியாகும்.

மம்தா பானர்ஜி
அடுத்தது மம்தா பானர்ஜி சொன்னதை நிதிஷ்குமாரோ, சோனியா காந்தியோ, ஸ்டாலினோ கேட்க மாட்டார்கள், அதற்கடுத்து சோனியா சொல்வதை நிதிஷ்குமாரோ,மம்தா பானர்ஜியோ, சந்திரசேகர் ராவ்வோ கேட்க மாட்டார்கள் இது இயல்பான எண்களின் விதி ஆகும் ,ஒரு எண்ணுக்கு எல்லா எண்களும் இணக்கமாக இருக்க முடியாது, இதே மாதிரி பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதிஷ்குமார் ஒத்துப்போக முடியாமல் இருப்பதற்கு காரணமும் இந்த விதிதான்

நரேந்திரமோடி
நரேந்திர மோடி அவர்களுடைய பிறந்த நாள் 17 .9 . 1950 நிதிஷ்குமார் பிறந்த நாள் 1.3 1953 இயல்பாகவே நியூமராலஜியின் தத்துவப்படி ஒன்றாம் என்னுடன் அறவே ஒத்துப் போகாத எண் 6 மற்றும் 8ம் எண் ஆகும், பிரதமர் 17என்ற 8ஆம் எண்ணில் உள்ளதாலும் நிதிஷ்குமார் ஒன்றாம் எண்ணில் உள்ளதாலும் தான் இந்த நிலை. நிதிஷ்குமார் தன்னை பிரதமராக்க பெரிதும் உதவுவார்கள் என்று நினைத்து உள்ள மம்தா பானர்ஜி 5.1. 1955 பிறந்துள்ளார், இவர் விதி எண் 8, இதனால் இவருக்கு நிதிஷ்குமாரின் கொள்கை அறவே பிடிக்காது அதனால் நிச்சயமாக நிதீஷ் குமார்க்கு மம்தாவின் உதவி கிடைக்காது.

மோடி உடன் திடீர் கூட்டணி
மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியுடன் எலெக்சன் நேரத்தில் அதாவது 2024 எலக்சன்ல ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அவர்கள் இருவருமே 8ம் எண் ஆதிக்கத்தில் உள்ளார்கள் ,நரேந்திர மோடி அவர்களும் மம்தா பானர்ஜியும் எட்டாம் எண் ஆதிக்கத்தில் உள்ளதால் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகலாம், கண்டிப்பாக சோனியா நிதிஷ்க்கு ஆதரவளிக்க துணிய மாட்டார் ஏனெனில் சோனியாவின் பிறந்தநாளான 9 .12.1946 அதாவது 9ம் எண் கொஞ்சம் கூட ஒட்ட விடாது நிதிஷ் உடன் அதனால் காங்கிரஸ் கதவும் நிரந்தரமாக அடைக்கப்பட்டு போகலாம்.

பறிபோகும் முதல்வர் பதவி
பிகாரின் துணை முதல்வர் தேஜஸ்வியால் விரைவில் நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியை இழக்க வேண்டியது வரலாம் ஏனெனில் சோனியாவை போன்றே தேஜஸ்வி யும் 9 ஆம் தேதியில் பிறந்துள்ளதால் நிச்சயம் அந்த எண் அதன் வேலையை காட்ட ஆரம்பிப்பது உறுதி. சரி நிதிஷ்குமார் நிலைதான் என்ன? அப்படி என்று நீங்க மனதுக்குள்ளே நினைப்பது தெரிகிறது.

மு.க.ஸ்டாலின் + நிதிஷ்குமார்
நிச்சயமாக தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் நிதிஷ்குமாருக்கு உதவலாம் ஏனெனில் இவர் பிறந்த தேதியும் அவர் பிறந்த தேதியும் இணக்கமானது. சீதாராம் எச்சூரி, பிரகாஷ் காரத் உதவலாம் ஏனெனில் இவங்க இரண்டு பேரின் பிறந்தநாளும் அவருக்கு சாதகமாக உள்ளது, இது எப்படி இருக்குன்னா மாட்டு வண்டியில் போகும்போது அதுல ஏற்பட்ட கோளாறுக்கு காரில் வந்தவர் அவருடைய டயரை கழட்டி கொடுத்தது போல்தான்.

பிரதமராகப்போவது யார்?
அப்படியானால் 2024 லோக்சபா தேர்தலில் யார் பிரதமராக வாய்ப்பு உள்ளது என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், 8ஆம் எண் காரருக்கே வெற்றி வழங்கப்படும் எந்த சிரமமுமின்றி, 351 சீட்டுக்கு மேல் எம்பி சீட் பிடித்து வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார் இந்த 17ம் தேதி பிறந்தவர் ,வரும் 2024 கூட்டு எண் 8 ஆகும், எனவே 17ஆம் தேதி பிறந்த இவருக்கு தேசம் முழுக்க வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என நியூமராலஜியின் கணிப்புப்படி உறுதியாக தெரிகிறது.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications