Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனது மனைவியை வீட்டிற்குள் சிறைவைத்து பூட்டி Rooster Position-யில் 4 மணிநேரம் நிற்க வைத்து டார்ச்சர் செய்த சம்பவம் அதிர வைத்துள்ளது.

மும்பையை சேர்ந்தவர் அர்பாஸ் சையத் (வயது 25). திருமணம் ஆனவர். திருமணம் ஆன புதிதில் அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப விஷயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

அடிக்கடி கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அர்பாஸ் சையத் தனது மனைவியை வீட்டுக்குள் சிறை வைத்து சித்ரவதை செய்ய தொடங்கினார்.

அடிக்கடி மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளார். வாளால் வெட்டி விடுவதாக மிரட்டி உள்ளதோடு, முகத்தில் ஆசீட் வீசுவதாகவும் பயம்காட்டி உள்ளார். இவை எல்லாவற்றுக்குள் மேலாக மனைவியை நூதன முறையில் கொடுமைப்படுத்தி உள்ளார். இரண்டு கைகளை மட்டும் தரையில் ஊன்றி மொத்த உடலையும் மேல்நோக்கி தூக்கிவைத்தபடி 'Roosted Position'-லில் 4 மணிநேரம் இருக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.

மனைவியின் செல்போனையும் பிடுங்கி வைத்துள்ளதால் அவரால் யாரிடமும் சொல்லவும் முடியவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்தி தொடர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளார் அர்பாஸ் சையத். இந்த கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல் அவரது மனைவி வீட்டில் இருந்து தப்பித்து சென்றார். மனைவி காணாமல் சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டில் இருந்து அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்தார்.
ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதனால் மனைவி அவரது தாயின் வீட்டுக்கு சென்று இருக்கலாம் என்று நினைத்தார். இதனால் அங்கு சென்ற அர்பாஸ் சையத், கத்தியால் வெட்டினார். இதில் அவரது மனைவி காயமடைந்தார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் அர்பாஸ் சையத்தை கைது செய்தனர்.

விசாரணையின்போது சையத் அர்பாஸ் மீது ஏராளமான வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவர் மீது மொத்தம் 19 கிரிமினல் வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவரது பெயரை ரவுடி பட்டியலில் சேர்க்க தேவையான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+