"ஒரே ஒரு மெசேஞ்.." க்ளிக் செய்தவுடன் காலியான வங்கி கணக்குகள்.. ஏமாந்த சீரியல் நடிகை! புதுவித மோசடி
பணக்கார வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து பெரிய மோசடி நடந்து வருகிறது.
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் டாப் வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியில், 40க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல லட்ச ரூபாயை இழந்துள்ளனர்.
இந்த நவீன உலகில் எல்லாமே இணையம் வழியாகவே நடைபெற்று வருகிறது. ஷாப்பிங், உணவு ஆர்டர் என்று பல்வேறு துறைகளை அடுத்த கட்டத்திற்கு இணையம் எடுத்துச் சென்றுள்ளது என்பதே உண்மையாகும்.
இப்படி இணையம் பல துறைகளின் வளர்ச்சிக்கு உதவியுள்ள அதேநேரத்தில் சைபர் க்ரைம் குற்றவாளிகள் இணையத்தைக் குறிவைத்தே மோசடியில் இறங்கியுள்ளனர். இதனால் பலரும் பணத்தை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

மகாராஷ்டிரா
அப்படிதான் இங்கு மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பலரும் பல லட்ச ரூபாயை மோசடிகாரர்களிடம் ஏமாந்து போயுள்ளனர். மும்பையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் குறைந்தது 40 வாடிக்கையாளர்கள் இப்படி தான் பல லட்ச ரூபாயை ஏமாந்துள்ளனர். கேஒய்சி (KYC) மற்றும் பான் விவகாரங்களை அப்டேட் செய்ய வேண்டும் என்று இவர்களுக்கு வங்கியில் இருந்து வருவது போலப் போலி மெசேஞ் வந்துள்ளது. அந்த லிங்கை க்ளிக் செய்து மூன்று நாட்களில் இவர்கள் பல லட்ச ரூபாயை இழந்துள்ளனர்.

வங்கிகள்
கேஒய்சி என்றால் Know Your Customer ஆகும்.. இப்போது அனைத்து வாடிக்கையாளர்களின் தரவுகளை கேஒஸ்சி மூலம் வங்கிகள் நிச்சயம் சேகரித்து வைக்க வேண்டும். இதை வங்கியின் செயலியில் இருந்தே செய்துவிட முடியும். அல்லது வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று செய்யலாம். இதைத் தான் தவறாகப் பயன்படுத்தி.. சில மோசடி பேர்வழிகள் அப்பாவி மக்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபடுகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது.

போலி ஃபிஷிங் லிங்குகள்
இதுபோல யாரென்றே தெரியாதவர்கள் வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களைக் கேட்கும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று மும்பை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேஓய்சி மற்றும் பான் கார்டு தகவல்களை அப்டேட் செய்யாததால் அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகக் கூறி, போலியான ஃபிஷிங் லிங்குகளை கொண்ட மெசேஞ்களை இவர்கள் அனுப்புகிறார்கள். அந்த லிங்குகளை க்ளிக் செய்யும் போது வங்கிக் கணக்கில் இருக்கும் அனைத்து பணமும் காலியாகிறது.

மாயமாகும் பணம்
அதுபோன்ற லிங்க்குளை க்ளிக் செய்யும்போது, அது வங்கியைப் போலவே இருக்கும் போலியான இணையதளத்திற்கு அழைத்துச் செல்லும்.. அங்கு வாடிக்கையாளர் ஐடி, பாஸ்வேர்ட் உள்ளிட்ட ரகசியத் தகவல்களைக் கேட்கிறது. அது உண்மையான வங்கி இணையதளம் என்று நம்பி, வாடிக்கையாளர்களும் அந்த தரவுகளை பதிவிடுகிறார்கள். இந்த தகவல்களை வைத்து மூன்று நாட்கள் கழித்து, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பல லட்ச ரூபாயைக் கொள்ளையடித்துள்ளனர்.

டிவி சிரியல் நடிகை
இந்த வங்கி மோசடியால் பாதிக்கப்பட்ட 40 பேரில் இந்தி டிவி நடிகை ஸ்வேதா மேமனும் ஒருவர் ஆவார். கடந்த வியாழக்கிழமை அவர் தனது வங்கியில் இருந்து வந்ததாக நம்பி அந்த போலி மெசேஞ்சில் இருக்கும் லிங்கை கிளிக் செய்துள்ளனர். அப்போது ஓபன் ஆன போலியான போர்ட்டலில், வாடிக்கையாளர் ஐடி, பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களைப் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு ஓரிரு நாட்கள் கழித்து, மீண்டும் ஒருவர் வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாகக் கூறி ஓடிபியை கேட்டுள்ளார். இவரும் நம்பி கொடுக்கவே சுமார் 58,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications