மகாராஷ்டிராவில் சரிந்து விழுந்த 3 அடுக்கு கட்டடம்.. இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் 3 அடுக்குகளை கொண்ட ஒரு கட்டடம் இன்று அதிகாலையில் இடிந்து விழுந்ததால் அதன் இடிப்பாடுகளில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் பலர் இடிப்பாடுகளில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தாணேவில் பிவாண்டி என்ற பகுதியில் உள்ளது 3 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு. இங்கு மொத்தம் 21 வீடுகள் உள்ளன. இந்த ஜிலானி அடுக்குமாடி குடியிருப்பில் 69ஆவது எண் கொண்ட வீடு 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

5 dead as the 3 storey building collapses in Maharastra

இந்த நிலையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டடத்தின் பாதி அளவு சரிந்தது. அதிகாலை என்பதால் பலர் தூங்கிக் கொண்டிருந்தனர். தகவலறிந்த தேசிய பேரிடர் மீட்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.

5 dead as the 3 storey building collapses in Maharastra

இந்த விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் 20 முதல் 25 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+