மகாராஷ்டிராவில் என்னதான் நடக்குது?.. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 66,358 பேருக்கு கொரோனா!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் புதிதாக 66,358 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒரே நாளில் 895 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை கடுமையாக இருந்து வருகிறது. கொரோனாவின் முதல் அலையிலும் இரண்டாவது அலையிலும் மிகவும் பாதிக்கப்படும் மாநிலம் மகாராஷ்டிரா.

இரு முறையும் கொரோனா கேஸ்களில் நம்பர் 1-இல் இருக்கிறது. தற்போது இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 66,358 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

எத்தனை பேர் பலி

எத்தனை பேர் பலி

அது போல் ஒரே நாளில் 895 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,10,085 ஆகும். அது போல் இறந்தோரின் எண்ணிக்கை 66,179 பேராவர். மும்பையில் மட்டும் புதிதாக 3,999 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா

கொரோனா

இதனால் மும்பையில் இதுவரை 6.35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மும்பையில் ஒரே நாளில் 59 பேர் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 12,920 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 67,752 நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இதனால் இதுவரை 36,69,548 பேர் கொரோனாவிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனாவால் பாதிப்பு

தற்போது மகாராஷ்டிராவில் 6,72,434 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநிலத்தில் கொரோனாவால் மீள்வோரின் சதவீதம் 83.21 சதவீதமாக உள்ளது. அது போல் இறப்போரின் எண்ணிக்கை 1.5 சதவீதமாகும். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் வீதம் 16.80 சதவீதமாக உள்ளது.

புனே

புனே

மும்பை மண்டலத்தில் 10.031 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டது. 118 பேர் பலியாகிவிட்டனர். இதனால் மும்பை மண்டலத்தில் 13,35,613 பேர் இதுவரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் நாசிக் மண்டலத்தில் புதிதாக 17,064 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அது போல் புனே மண்டலத்தில் 12,215 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+