ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா போர்க் கப்பலில் தீ விபத்து! பெரும் சேதம்.. மாலுமியை தேடும் பணி தீவிரம்..!
மும்பை: மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்க்கப்பலான ஐஎன்எஸ் பிரம்மபுத்ராவில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் மாலுமி ஒருவர் காணவில்லை. அவரை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் இந்த கப்பல் பராமரிப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தீ பிடித்திருக்கிறது. நேற்றே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனை அணைக்கும் பணயில், மும்பை தீயணைப்புத்துறை தீவிரமாக ஈடுபட்டிருந்தது. கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது. ஆனால், கப்பலில் இருந்த ஒரு மாலுமி காணவில்லை. அவரை தேடும் பணியில் சக மாலுமிகளும், தீயணைப்பு வீரர்களுக்கும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இன்று காலைக்குள் மும்பை கடற்படை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் பற்றிய தீ, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் கப்பலில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டுபிடிக்க நாங்கள் முழு சோதனையை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் கப்பலை இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியவில்லை. கப்பல் ஒரு பக்கமாக சாய்ந்திருக்கிறது.
கப்பலை எங்களால் நிமிர்த்த முடியவில்லை. கப்பலிலிருந்த அனைவரையும் நாங்கள் பத்திரமாக மீட்டிருக்கிறோம். ஆனால், ஒரேயொரு ஜூனியர் மாலுமியை மட்டும் காணவில்லை. அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. விபத்து குறித்த விசாரணைக்கு இந்திய கடற்படையால் உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
ஐஎன்எஸ் பிரம்மபுத்ரா என்பது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலாகும். இதன் ஏவுகணை தாக்குல் கப்பலின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது கடந்த 2000ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சேவையாற்றி வருகிறது. இந்தக் கப்பலில் 40 அதிகாரிகள் மற்றும் 330 மாலுமிகள் வரை பணியாற்ற முடியும்.
கப்பலில் நடுத்தர தூரம், குறுகிய தூரத்தில் உள்ள இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்ட துப்பாக்கிகள் இருக்கின்றன. மேலும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், வான் ஏவுகணைகள் மற்றும் டார்பிடோ ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் கடல்சார் போரின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பரந்த அளவிலான சென்சார்களைக் கொண்டுள்ளது. தவிர சீக்கிங் மற்றும் சேடக் ஹெலிகாப்டர்களை இயக்கும் திறனையும் இந்த கப்பல் கொண்டிருக்கிறது.
இந்த கப்பல் 5,300 டன்கள் எடை, 125 மீட்டர் நீளம், 14.4 மீட்டர் உயரம் கொண்டது. 27 நாட்டிகல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications