மும்பை அடல் சேது பாலத்திலிருந்து பெண் தற்கொலை முயற்சி! கடவுள் போல் காப்பாற்றிய கால் டாக்ஸி டிரைவர்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள அடல் சேது பாலத்திலிருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாக அவர் கார் டிரைவர் மற்றும் போலீஸாரால் காப்பாற்றப்பட்டார்.
வடகிழக்கு மும்பையின் முலுந்த் பகுதியை சேர்ந்தவர் ரீமா முகேஷ் படேல். இவருக்கு 56 வயதாகிறது. இவர் மும்பையில் உள்ள அடல் சேது பாலத்திற்கு நேற்று மாலை 5 மணிக்கு சென்றார். அங்கு பாதுகாப்பு தடுப்பு மீது அமர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கடலில் எதையோ வீசி அடித்தார். பின்னர் அவர் உடனே கடலில் குதிக்க முயற்சித்தார். அப்போது அங்கு வந்த கால் டாக்ஸி டிரைவர் அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்தார். ஆனாலும் அந்த பெண் வர மறுத்தார்.
இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து பணிக்காக சென்ற மும்பை போலீஸார் வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்ணை காப்பாற்ற கால் டாக்ஸி டிரைவருக்கு உதவினார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த வீடியோ வெளியான நிலையில் அதில் பாதுகாப்பு தடுப்பில் இருந்து அந்த பெண் குதித்தார். அப்போது கால் டாக்ஸி டிரைவர் அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டார். இவர் பாலத்தில் நின்று கொண்டு அந்த பெண்ணை இழுத்தார். ஆனால் அந்த பெண்ணோ இன்னொரு கைகளால் அவரை தட்டி விட்டார்.

ஆனாலும் அந்த இளைஞர் அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்தார். அப்போது அவ்வழியாக வந்த போலீஸார் திபுதிபுவென ஓடி வந்து பாலத்தில் ஏறி தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பெண்ணை காப்பாற்றினார்கள். இதையடுத்து அந்த பெண்ணை சமாதானம் செய்து அந்த கால் டாக்ஸியில் அனுப்பி வைத்தனர். இந்த பெண்ணுக்கு மன அழுத்தம் இருந்ததாக தெரிகிறது.

கடந்த மாதம் 38 வயது மதிக்கத்தக்க ஆண் இதே பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தோம்பிவிலியை சேர்ந்த பொறியாளர் ஸ்ரீனிவாஸ் அந்த பாலத்திற்கு வந்து தனது காரை நிறுத்தினார். பின்னர் காரை பார்க் செய்துவிட்டு அவர் பாலத்தில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications