150 ரூபாய் பிரியாணி சாப்பிட்ட இளம்பெண்.. செலவு 8 லட்சம் ரூபாய்.. என்ன நடந்தது தெரியுமா?
மும்பை: இன்றைக்கு பிரியாணி பலரது விருப்பமான உணவாக உள்ளது. சென்னையில் பரோட்டாவைவிட, பிரைடு ரைஸ், நூடுல்ஸைவிட அதிகமாக மக்கள் விரும்புவது பிரியாணி உணவைத்தான். ஆனால் தரமான பிரியாணி சாப்பிட்டால் பிரச்சனை இல்லை. அதேபோல் பிரியாணியை அவசரப்படாமல் சாப்பிட்டாலும் பிரச்சனை இல்லை. மும்பையில் ஒரு பெண் 150 முதல் 200 ரூபாய் மதிப்புள்ள பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதன்பின்னர் 8 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார்.. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
மும்பை குர்லா பகுதியில் 34 வயது பெண், கணவருடன் வசித்து வருகிறார்.இவர்களுக்கு 7 வயதில் மகளும், 6 மாத மகனும் உள்ளனர். இளம் பெண்ணின் கணவர் அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். கடந்த 3-ந் தேதி 34 வயது பெண் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் பிரியாணி சாப்பிட விரும்பினா். இதையடுத்து பெண்ணின் கணவர் வீட்டருகே உள்ள கடையில் இருந்து சிக்கன் பிரியாணி வாங்கி வந்தார். அனைவரும் பிரியாணியை ருசித்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள்

அப்போது எதிர்பாராதவிதமாக பிரியாணியில் கிடந்த கோழி எலும்பு துண்டு பெண்ணின் தொண்டையில் சிக்கிக் கொண்டது. உடனடியாக அந்த இளம் பெண்ணை அவரது குடும்பத்தினர் உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது பெண்ணின் தொண்டையில் 3.2 செ.மீ. அளவிற்கு கோழி எலும்பு சிக்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் தொண்டையில் சிக்கியிருந்த எலும்பை எடுக்க முடிவு செய்தார்கள். பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்த போது தொண்டையில் சிக்கிய எலும்பு துண்டு மாயமாகி இருந்திருக்கிறது.
எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பு மார்பு, வயிறு பகுதியிலும் இல்லை. டாக்டர்கள் குழம்பி போயிருந்த நிலையில், உடலின் மேல் பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது எலும்பு துண்டு உணவு குழாய் வழியாக மூக்கு பகுதியில் சிக்கியிருந்ததை கண்டு ஆடிப்போனார்கள். வழக்கமாக தொண்டையில் சிக்கிய பொருட்கள் மேல் பகுதிக்கு செல்லாது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக பெண்ணின் தொண்டையில் சிக்கிய எலும்பு மேல் பகுதியில் நகர்ந்து இருந்தது தான் டாக்டர்களின் குழப்பத்திற்கு காரணம். ஒருவழியாக கோழி எலும்பை கண்டுபிடித்த டாக்டர்கள் குறிப்பிட்ட பகுதியில் அறுவை சிகிச்சை செய்து எலும்பு துண்டை அகற்றினர்.
2 மணி நேரத்தில் முடிய வேண்டிய அறுவை சிகிச்சை எலும்பு துண்டு இடம் பெயர்ந்ததால் 8 மணி நேரத்திற்கு மேல் போராட வேண்டியிருந்தது மேலும் பெண்ணின் மருத்துவ செலவும் ரூ.8 லட்சத்தை எட்டியது. இதில் மருத்துவமனை நிர்வாகம் நன்கொடை மூலம் பெண்ணின் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வரை திரட்டியது. இதனால் பெண் குடும்பத்தினர் சுமார் ரூ.4 லட்சம் கட்டணம் செலுத்தினர். அறுவை சிகிச்சை செய்த பெண் ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.
150 முதல் 200 ரூபாய் மதிப்புள்ள பிரியாணி சாப்பிட்டவருக்கு 8 லட்சம் செலவானதுடன், 8 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யும் நிலையும் ஏற்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரியாணியில் கிடந்த எலும்பு துண்டால் ஏற்பட்ட பாதிப்பால், அந்த பெண் இனிமேல் வாழ்நாளில் பிரியாணி சாப்பிடவும் மாட்டேன், சமைக்கவும் மாட்டேன் என்று முடிவு செய்திருக்கிறார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications