தங்கம் விலை உயருது! அரிசி விலை ஏன் உயரக் கூடாது.. நடிகர் நானா படேகர் கேள்வி
மும்பை: தங்கம் விலை உயருகிறது. ஆனால் அரிசி விலை ஏன் உயரவில்லை என நடிகர் நானா படேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாராஷ்டிராவின் வறட்சிப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில் நாம் என்ற அறக்கட்டளையை நடிகர் மகரந்த அனஸ்புரேவுடன் இணைந்து நானா படேகர் நடத்தி வருகிறார்.

அதன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நாசிக்கில் நடந்த ஷேத்காரி சம்மேளனம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய படேகர் விவசாயிகளின் குறைகளை அரசு தீர்க்கவில்லை என விமர்சனங்கள் முன் வைத்தார்.
அவர் பேசுகையில் அப்படிப்பட்ட அரசிடம் விவசாயிகள் எதையும் கோரக் கூடாது. விவசாயிகள், நல்ல நேரத்திற்காக காத்திருக்காமல் விடாமுயற்சியின் மூலம் நல்ல காலங்களைக் கொண்டு வர வேண்டும். எந்த அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
இளம் தலைமுறைக்கு நீங்கள் என்ன மாதிரியான லட்சியத்தை முன் வைக்கிறீர்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள். என்னால் அரசியலில் சேர முடியாது. விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டாம். தற்போதைய சூழ்நிலையை மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.
தங்கம் விலை உயரும் போது அரிசி விலை ஏன் உயரவில்லை? விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவு வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளைத் தீர்க்க அரசுக்கு நேரமில்லை என்றார். அது போல் விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் கிஷோர் ஆதரவு தெரிவித்து இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது.
அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: நியாயமான விலை கேட்பது இவ்வளவு அநியாயமானதா, குறைந்தபட்ச ஆதார விலை வழங்குகிறோம் என கூறி ஆட்சிக்கு வந்த பாசாங்குத்தனமான இந்த அரசியல்வாதிகளை கூட விட்டுவிடுவோம். ஆனால் விவசாயிகள் விளைவித்ததை சாப்பிட்டு உயிர் வாழும் தேச பக்தர்கள் கூட இவர்களை துரோகிகள் என முத்திரை குத்துகிறார்கள். இவர்களை எப்படி இந்தியர்கள் என சொல்ல முடியும்.
விவசாயிகள் போராட்டத்தின் போது சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. சுவர்கள் எழுப்பப்பட்டன. குழிகள் வெட்டப்பட்டன. துப்பாக்கிகள் சுடப்பட்டன. கண்ணீர் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. ஒவ்வொரு நாளும் தனது வார்த்தையை மாற்றிக் கொள்ளும் மோடியின் அரசாங்கம் அனைத்தையும் செய்தது.
மற்றொரு பக்கம் தேசம் முழுவதும் உணவு கொடுக்கும் விவசாயிகளின் மீது தேசவிரோதி என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. மதவெறி கொண்ட கூட்டத்தின் உறுதியான வாக்குறுதிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியும், அவரது அரசும் அவர்களது பக்தர்களும் விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள்.
அவர்களுக்கு உணவு கொடுப்பதை விவசாயிகள் நிறுத்த வேண்டும். ஆனால் இந்த நன்றி கெட்ட மக்களுக்கு மட்டுமில்லை. விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசிய காவல் துறையினருக்கும் தொடர்ந்து உணவளிக்கும் கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள். இந்த விவசாயிகள் தேச விரோதிகள் எனும் முத்திரை தகுதியானவர்களா என கேள்வி எழுப்பியிருந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications