100 கோடி சொத்து வைத்திருக்கும் பாதுகாவலர்.. சம்பளம் மட்டும் 15 லட்சம்! அள்ளி கொடுக்கும் உச்ச நடிகர்! அடேங்கப்பா
மும்பை: திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர், நடிகைகள் தற்போது தங்களுக்கு தனியாக பாதுகாவலர்களை நியமித்துக்கொள்கிறார்கள். இந்த பாதுகாவலர்கள் எப்போதும் நிழல் போல அந்த பிரபலங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும் பணியில் ஈடுபடுவதை பார்க்க முடியும். இதனால், அவர்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் மாறிவிடுவதால் சில நடிகர், நடிகைகள் பல லட்சங்களை சம்பளமாக கொட்டி கொடுக்கிறார்களாம்.
அந்த வகையில் இந்திய திரையுலகில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஒருவர் தனது பாதுகாவலருக்கு மாதம் 15 லட்சம் சம்பளமாக அளிக்கிறார். அந்த பாதுகாவலர் மட்டும் 100 கோடி சொத்து வைத்துள்ளாராம். இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சல்மான் கான் பாதுகாவலர் சம்பளம்
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இதனால் அவருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சல்மான் கான் எங்கு சென்றாலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைத் தவிர, அவரது தனிப்பட்ட பாதுகாவலர்களும் உடன் இருப்பார்கள். அதில் ஒருவராக இருப்பவர் ஷேரா.
சல்மான் கானின் நிழல் போல அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஷேராவை காண முடியும். சல்மான் கானின் நம்பிக்கைக்குரியவராக ஷேரா உள்ளாராம். இவருக்கு அளிக்கப்படும் சம்பளம், சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு பலரையும் வாய் பிளக்க வைத்துள்ளன. அதாவது, ஷேராவின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் உள்ளதாம்.
டைகர் செக்யூரிட்டி நிறுவனம்
சல்மான் கானின் பாதுகாவலராக ஷேரா சேர்ந்தது எப்படி?, அவருக்கு அளிக்கப்படும் சம்பளம் என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம். ஷேராவின் உண்மையான பெயர் குர்மீத் சிங். சீக்கிய மதத்தை சேர்ந்த ஷேரா, ஹாலிவுட் நடிகர் கியானு ரீவ்ஸ் இந்தியாவுக்கு வந்தபோது அவருக்கு பாதுகாவலராக இருந்துள்ளார்.
டைகர் செக்யூரிட்டி என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஷேராவின் திறமையை கண்டு, சல்மான் கானின் சகோதரரான ஷோஹைல் கான், இந்தூருக்கு செல்லும் போது அவரை பாதுகாவலராக நியமித்துள்ளார். 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ஷேரா, அப்போதிருந்தே சல்மான் கானின் குட்புக்கில் இடம் பெற்றார்.
மாதம் ரூ.15 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது
"ஷேரா இருந்தால்தான் பாதுகாப்பாக இருப்பது போல உணர்கிறேன்" என சொல்லும் அளவுக்கு, சல்மான் கான் எங்கு சென்றாலும் முதலில் அவர் முன்னால் சென்று கூட்டத்தில் இருந்து பாதுகாப்பாக அழைத்து செல்கிறார். துவக்கத்தில் சீக்கிய தலைப்பாகை, தாடியுடன் இருந்த ஷேரா, தனது பணிக்கு இடையூறாக இருப்பதாக கருதி அதை அகற்ற முடிவு செய்துவிட்டார்.
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஷேராவுக்கு சம்பளமாக மாதம் ரூ.15 லட்சம் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் ரூ.2 கோடி வருமானமாக பெறுகிறார். அது மட்டுமல்லாமல், சல்மான் கான் அவருக்கு பல்வேறு சலுகைகளையும் அளித்து வருகிறார். ஷேராவின் சொத்து மதிப்பு சுமார் ரூ.100 கோடிக்கு மேல் உள்ளதாம்.
ரேஞ்ச் ரோவர் கார்
கடந்த 2024ஆம் ஆண்டு, ரூ.1.40 கோடி மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரை அவர் வாங்கியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. 2011ஆம் ஆண்டு சல்மான் கான் பாடிகார்ட் என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் அவர் அணிந்து நடித்த பாதுகாவலர் உடைக்கு பல்வேறு நிறுவனங்கள் பெரும் தொகை அளிக்க முன்வந்தன.
ஆனால் சல்மான் கான், தனது பாதுகாவலர் ஷேராவின் நிறுவன ஆடையையே அணிந்து நடித்தார். "சல்மான் கானுக்காக உடம்பில் துப்பாக்கி குண்டையும் ஏற்க தயார்" என தனது வலைத்தள பதிவில் ஷேரா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications