நாடு முழுதும் AI டேட்டா சென்டர்.. அதானி குழுமம் 100 பில்லியன் டாலர் முதலீடு! அசத்தப்போகும் இந்தியா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதானி குழுமம், 2035-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுவதும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, செயற்கை நுண்ணறிவுக்கான டே்டா மையங்களை அமைக்க 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது, உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி மற்றும் கணினி உள்கட்டமைப்புகளில் ஒன்றாக அமைய உள்ளது.

நம் நாட்டின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவர் அதானி. இந்நிலையில் தான் அதானி குழுமம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகம் ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) புரட்சியை நோக்கி செல்கிறது. இது உலகப் பொருளாதாரங்களை மாற்றி அமைக்கும். இந்த மாற்றத்தில் இந்தியா ஒரு முக்கிய பங்காற்றத் தயாராக உள்ளது என்று அதானி குழும தலைவர் கவுதம் அதானி தெரிவித்தார்.

மேலும் ஏஐ துறையில் இந்தியா வெறும் கஸ்டமராக மட்டும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடாக மாற்றுவதற்காக எனர்ஜி, டேட்டா மையங்கள், கம்ப்யூட்டர் திறன் உள்ளிட்ட முழுமையான செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை

2035ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளது. இது செயற்கை நுண்ணறிவுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றும். மேலும் அடுத்த பத்தாண்டில் சர்வர் உற்பத்தி, கிளவுட் சேவைகள், நவீன மின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப விநியோகத் தொடர்கள் போன்ற தொடர்புடைய துறைகளில் கூடுதலாக 150 பில்லியன் டாலர் முதலீடுகளையும் இது கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் 2035-க்குள் மொத்த செயற்கை நுண்ணறிவுத் துறை முதலீடு 250 பில்லியன் டாலரை எட்டக்கூடும்.

இந்த முதலீடு அதானி கனெக்ஸ்-இன் தற்போதுள்ள தேசிய தரவு மையத் தளத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. தற்போது 2 ஜிகாவாட் திறன் கொண்ட இந்த தளம், 5 ஜிகாவாட்டாக விரிவாக்கப்பட உள்ளது. உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இது முக்கியமான கூட்டணிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, விசாகப்பட்டினத்தில் ஒரு பெரிய AI தரவு மைய வளாகத்தை அமைக்க கூகுள் உடன் அதானி குழுமம் சேர்ந்து செயல்படுகிறது. ஹைதராபாத் மற்றும் புனேவில் மைக்ரோசாஃப்ட் உடன் கூடுதலாக சில திட்டங்களிலும் இணைந்து செயல்படுகிறது. டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளுக்கு உதவும் வகையில் இரண்டாவது அதிவேக செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை உருவாக்குவதற்காக ஃபிளிப்கார்ட் உடன் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது.

புதிய உள்கட்டமைப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, மின் விநியோகம் மற்றும் பெரிய அளவிலான கம்ப்யூட்டிங் திறன்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும். இந்த மையங்கள் நவீன குளிர்விப்பு மற்றும் எனர்ஜில் திறனுள்ள மின் கட்டமைப்புடன் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் மற்றும் அதிக திறன் கொண்ட கம்ப்யூட்டிங் அமைப்புகளுக்கு உதவும்.

இந்திய ஸ்டார்ட்அப்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models) மற்றும் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் (Deep-tech Innovation) ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதற்கான வசதிகள் ஒதுக்கப்படும். இதற்கு தேவையான மின்சாரத்தை வழங்குவதில் அதானி குழுமம் முக்கிய பங்காற்றும். குஜராத்தில் உள்ள அதானியின் கவாடா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம், 30 ஜிகாவாட் திறன் கொண்டது,. இது தேவையான அளவுக்கு மின்சாரத்தை வழங்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் மற்றும் பேட்டரி சேமிப்பு வசதிகளை விரிவாக்க கூடுதலாக 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், இறக்குமதியைக் குறைக்கவும், மின்மாற்றிகள், மின்சாதனங்கள், கிரிட் அமைப்புகள் மற்றும் குளிர்விப்பு தொழில்நுட்பங்கள் போன்ற முக்கியமானவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யவும் குழுமம் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளை உற்பத்தி செய்யும் உலக மையமாக மாற இந்தியாவுக்கு இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பில் திறமைகளை வளர்க்கவும், எதிர்காலத்திற்கான திறமையான பணியாளர்களை உருவாக்கவும் நிறுவனம் முயற்சிகளை அறிவித்துள்ளது. கல்வி நிறுவனங்களுடன் இணைந்து சிறப்புப் பொறியியல் படிப்புகள், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் இன்டர்ன்ஷிப் திட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தற்சார்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாடு போன்ற தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்றதாக அமைகிறது என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு தளத்தை உருவாக்குவதில் பங்கேற்க உலக அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் கூட்டாளர்களை அழைக்கிறது’’ என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+