மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவை ஆட்டிப்படைக்கும் கொரோனா.. அமைச்சர் ஆதித்ய தாக்கரேவுக்கு தொற்று உறுதி!

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தன்னுடன் இருந்தவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

Aditya Thackeray confirmed with covid 19 infection

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா உச்சம் தொட்டு வருகிறது. 5,000-க்குள் இருந்த கொரோனா தற்போது 30,000-ஐ நெருங்கி விட்டது. அதாவது இந்தியாவின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 80% பாதிப்புகள் பதிவாகி உள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் மராட்டியத்தில் நாக்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பரவலாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பாவம்தான்.. சீன கொரோனா தடுப்பூசி போட்டு 2 நாள்தான் ஆச்சு.. இம்ரான் கான் நிலைமையை பார்த்தீங்களா!பாவம்தான்.. சீன கொரோனா தடுப்பூசி போட்டு 2 நாள்தான் ஆச்சு.. இம்ரான் கான் நிலைமையை பார்த்தீங்களா!

இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஆதித்ய தாக்கரேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ''எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்ததால் நானாகவே சென்று பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

English summary
Maharashtra Environment Minister Aditya Thackeray, son of Maharashtra Chief Minister Uttam Thackeray, has been confirmed to be infected with the corona virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X