சர்ச்சை! மீண்டும் கொண்டு வரப்படும் விவசாய சட்டங்கள்?? பரபரப்பை கிளப்பும் அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மத்திய அரசு விவசாய சட்டங்களை வாபஸ் பெற்று ஒரு மாதம் மட்டுமே நிறைவடையும் நிலையில், விவசாய சட்டங்கள் குறித்து வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ள கருத்து மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு புதிதாக 3 விவசாய சட்டங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்கள் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள் என்றும் இதன் மூலம் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்தது.

இருப்பினும், இந்தச் சட்டங்கள் விவசாயிகளின் நலனிற்கு எதிராகவும் கார்ப்ரேட் ஆதரவாகவும் இருப்பதாகக் கூறி விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர்.

 விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

முதலில் பஞ்சாப் மாநிலத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள், பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர். அங்கு டிசம்பர் மாதம் நிலவிய கடும் குளிர் தொடங்கி மார்ச், ஏப்ரல் சமயத்தில் நிலவிய கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். சுமார் ஓராண்டாக நடந்த போராட்டத்தில் விவசாயிகள் பலரும் உயிரிழந்தனர்.

 பிரதமர் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி அறிவிப்பு

பல மாதங்களாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்த போதிலும், மத்திய அமைச்சர்களும் பலரும் விவசாய தலைவர்களும் விவசாய சட்டங்கள் கண்டிப்பாகத் திரும்பப் பெறப்படமாட்டாது என்றே தொடர்ந்து கூறி வந்தனர். இந்தச் சூழலில் கடந்த மாதம் குரு நானக் ஜெய்ந்தியை முன்னிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததாகவும் இருப்பினும், சிலருக்கு இதைப் புரிய வைக்க முடியவில்லை என்பதால் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக அவர் தெரிவித்தார்.

 அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

இருப்பினும், அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச தேர்தலைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகப் பலரும் சாடினர். இந்தச் சூழ்நிலையில் விவசாய சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் பேசிய போது தான் இப்படியொரு கருத்தை வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

 70 ஆண்டுகளில் மிகப் பெரிய சீர்திருத்தம்

70 ஆண்டுகளில் மிகப் பெரிய சீர்திருத்தம்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "விவசாயத் திருத்தச் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் சிலருக்கு இந்தச் சட்டங்கள் பிடிக்கவில்லை, சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை. ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்றமடையவில்லை. இப்போது ஒரு படி பின்வாங்கியுள்ளோம்.

மீண்டும் கொண்டு வரப்படலாம்

ஆனால் விவசாயிகள் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்பதால் கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்" என்று அவர் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே, தேர்தலுக்காகத் தான் விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 லக்கிம்பூர் சம்பவம்

லக்கிம்பூர் சம்பவம்

விவசாயிகள் போராட்டம் நடைபெற்றபோது பல முக்கிய அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளைக் கடுமையாகச் சாடி வந்தனர். இதற்கிடையே தான் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பிய விவசாயிகள் மீது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுக்குச் சொந்தமான கார்கள் மோதியது. இதில் சுமார் 8 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+