அப்பாடா.. நின்றது எமெர்ஜென்சி சிக்னல்.. பத்திரமாக லண்டனில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், இங்கிலாந்து மீது பறந்து கொண்டிருந்த போது திடீரென ​​அதில் இருந்து எமர்ஜென்சி சிக்னல் வந்ததாக ஃபிளைட் டிராக்கரான ஃபிளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. இந்நிலையில் அந்த எமர்ஜென்சி சிக்னல் நிறுத்தப்பட்டது. மேலும், அந்த விமானம் லண்டனில் தரையிறங்கி உள்ளதாக விமானங்களை டிராக் செய்யும் ஃப்ளைட் அவேர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

உலகில் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக விமானங்கள் கருதப்படுகிறது. மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமானங்களில் மிகக் குறைவான விபத்துகள் ஏற்படுவதே இதற்குக் காரணமாகும்.

england air india flight

ஏர் இந்தியா: இந்தியாவைப் பொறுத்தவரை நமது நாட்டில் உள்ள மிக முக்கியமான ஏர்லைன்களில் ஒன்று ஏர் இந்தியா. ஆனால், கடந்த சில நாட்களாக ஏர் இந்தியா நிறுவனம் குறித்து மோசமான செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையே இன்று மும்பையில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், இங்கிலாந்து மீது பறந்து கொண்டிருந்த போது திடீரென ​​அதில் இருந்து எமர்ஜென்சி சிக்னல் வந்ததாக ஃபிளைட் டிராக்கரான ஃபிளைட் ரேடார் 24 தெரிவித்தது.

எமர்ஜென்சி சிக்னல்: இது குறித்து ஃபிளைட் ரேடார் தனது எக்ஸ் பக்கத்தில், "மும்பையில் இருந்து லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம்- AIC129 விமானத்தில் இருந்து squawking 7700 என்ற எமர்ஜென்சி சிக்னல் வெளியிட்டுள்ளது. தற்போது வரை இதற்கான காரணம் தெரியவில்லை" என்று பதிவிட்டது. squawking 7700 என்பது எமர்ஜென்சி தரையிறக்கம் உள்ளிட்ட பல அவசரக்கால சூழ்நிலைகளின் போது குறிக்கும் ஒரு எமர்ஜென்சி சிக்னல் ஆகும்.

ஸ்குவாக் குறியீடுகள் என்பது பறக்கும் விமானங்களை அடையாளம் காண ஏடிசி எனப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் தரும் ஒரு குறியீடு. அவை 0000 முதல் 7777 வரையில் நான்கு இலக்க எண்களைக் கொண்டிருக்கும். அவற்றில் சில குறியீடுகள் குறிப்பிட்ட அபாயங்களைக் குறிப்பதாக இருக்கும்.

இது எப்படி வேலை செய்யும்: அதாவது விமானம் தங்கள் எல்லைக்குள் நுழையும் போது ஏடிசி ஸ்குவாக் குறியீட்டை உருவாக்கி, விமானத்திற்கு அனுப்பும். நிலைமையைப் பொறுத்து தேவையான ஸ்குவாக் குறியீட்டை வைத்து விமானி பதில் அனுப்புவார். அப்படி ஏர் இந்தியாவின் இந்த ஏஐசி129 விமானி 7700 குறியீட்டை அனுப்பியிருக்கிறார். இது விமானத்தில் பொதுவான ஒரு அவசர நிலையை ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது. தங்கள் விமானத்திற்கு உடனடி கவனம் தேவை என்பதைக் குறிக்கும் ஒரு எச்சரிக்கை குறியீடாகும்.

திருச்சியில் சம்பவம்: டாடாவுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானம் கடந்த வாரம் தான் திருச்சியில் அவசர அவசரமாகத் தரையிறங்கியது. விமானத்தின் ஹைட்ராலிக் கட்டமைப்பில் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், திருச்சியைச் சுற்றிய விமானம் சில மணி நேரம் பறந்து கொண்டு இருந்தது. பின்னர் பாதுகாப்பான அளவுக்கு எரிபொருளைக் குறைத்த பிறகு விமானம் திருச்சியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. இதில் பயணிகள் உட்பட யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்களில் மீண்டும் ஏர் இந்தியா விமானத்தில் இருந்த எமர்ஜென்சி சிக்னல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த எமர்ஜென்சி சிக்னல் சிறிது நேரத்தில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த ஏர் இந்தியா விமானம், தற்போது லண்டனில் தரையிறங்கி உள்ளதாக விமானங்களை டிராக் செய்யும் ஃப்ளைட் அவேர் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. போர் விமானம் ஒன்று பறந்தபோது ஏற்பட்ட அதீத சத்தம் காரணமாக எமர்ஜென்சி குறியீடு அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+