ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஷாக்! நடு வானில் அசிங்கம் செய்த நபர்.. அதிர்ந்துபோன பயணிகள்
மும்பை: மும்பையில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் விமானத்தில் பயணிகள் முன்பாகவே சிறுநீர் கழித்தது விமான பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விமானம் தரையிறங்கியதும் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
விமான பயணங்களின் போது பயணிகள் சிலர் நடந்து கொள்ளும் விதம் சமீப காலமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விமானத்தில் வயதான பெண் பயணி மீது குடிபோதையில் சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை ஏர் இந்தியா கையாண்ட விதமும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதாவது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாசில் சங்கர் மிஸ்ரா என்ற பயணி வந்தார். அமெரிக்க வங்கியில் பணியாற்றி வந்த இவர், மது போதையில் வயதான பெண் பயணி மீது சிறு நீர் கழித்தார். விமானம் தரையிரங்கியதும் அநாகரீக செயலில் ஈடுபட்ட சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மீண்டும் ஒரு அநாகரிக செயல்: இதனால், நடைபெற்ற சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஏர் இந்தியா தலைமைக்கு கடிதம் எழுதினார். அதன்பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது சங்கர் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சங்கர் மிஸ்ராவுக்கு நான்கு மாதங்கள் தங்கள் நிறுவன விமானத்தில் பயணிக்கவும் ஏர் இந்தியா தடை விதித்தது. இந்தந் சம்பவத்திற்கு பிறகு அவ்வப்போது பயணிகள் சிலர் குடிபோதையில் ரகளை செய்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தில் மீண்டும் ஒரு அநாகரிக செயல் நடந்துள்ளது. அதாவது கடந்த ஜூன் 24 ஆம் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AIC 866- என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ராம் சிங் என்ற பயணி சென்று கொண்டு இருந்தார். இருக்கை எண் 17F - அந்த பயணிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
மலம் கழித்த பயணி: விமானம் நடு வானில் சென்று கொண்டிருந்த போது திடீரென ராம் சிங், விமானத்திற்குள் பயணிகள் இருக்கும் இடத்திற்குள்ளாகவே சிறு நீர் கழித்தார். அங்கேயே மலம் கழித்து அநாகரீக செயலில் ஈடுபட்டுள்ளார். ராம்சிங்கின் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் இது குறித்து விமான ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்த விமான ஊழியர்கள் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தனர்.
அதோடு விமானத்தின் கேப்டன் நடந்த சம்பவம் குறித்து விமான நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார். விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் தயாராக இருந்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்திய தண்டனை சட்டம் 294, 510, உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ராம்சிங் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். விமானத்தில் நடு வானில் பயணி சக பயணிகள் முன்னிலையில் ஈடுபட்ட இந்த அநாகரீக செயல் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications