காட்டிக்கொடுத்த கைக்கடிகாரம்.. விமான விபத்தில் பலியான அஜித் பவார் உடல் அடையாளம் காணப்பட்டது எப்படி?
மும்பை: மகாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் பயணித்த சிறிய ரக தனி விமானம் இன்று காலை விபத்தில் சிக்கியது. இதில் அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணித்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர். அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்தது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னமாக கடிகாரம் உள்ள நிலையில் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் மூலமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து பாராமதிக்கு புறப்பட்டார். பாராமதியில் நடைபெற இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க அவர் சென்றார்.

விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் எனும் நிறுவனத்தின் ‛பம்பார்டியர் லியர்ஜெட் 45' ரக விமானத்தில் அவர் பயணித்தார். இது சிறிய ரக விமானமாகும். இந்த விமானத்தில் அஜித் பவாருடன் அவருடைய ஒரு பாதுகாவலர், ஒரு உதவியாளர் சென்றனர். 2 பைலட்டுகள் விமானத்தை இயக்கினர்.
பாராமதி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முயன்றது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இதில் அஜித் பவார் உள்பட 5 பேரும் இறந்தனர். முதற்கட்ட விசாரணையில் காலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் ஓடுதளம் தெரியாமல் விமானம் தரையிறங்க முயன்று விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விமானம் தீப்பற்றி எரிந்ததால் அஜித் பவார் உள்பட 5 பேரின் உடல்களும் கருகின. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து 5 பேரின் உடல்களை கைப்பற்றிர். அப்போது அவர்களின் உடல்கள் தீயில் எரிந்து இருந்ததால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. நீண்டநேரத்துக்கு பிறகு அஜித் பவாரின் உடல் அடையாளம் காணப்பட்டது.
அஜித் பவார் தனது கையில் அணிந்திருந்த கடிகாரத்தை வைத்து அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல் அஜித் பவாரின் உதவியாளர், பாதுகாவலர், 2 பைலட்டுகளின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், அவர்கள் அணிந்திருந்த பொருட்களை வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளன.
அஜித் பவார் வசம் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் என்பது கடிகாரமாக உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அவரது மரணத்துக்கு பிறகு அவரது உடலை கைப்பற்ற அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் உதவியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக முதலில் அவரது சித்தப்பா சரத் பவார் தான் இருந்தார்.
கடந்த 2023ம் மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி உயர்த்தினார். அந்த சமயத்தில் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் துணை முதல்வராக சரத் பவார் இருந்தார். ஏக்நாத் ஷிண்டேவால் குழப்பம் ஏற்பட்ட பிறகு உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது ஏக்நாத் ஷிண்டேவை போல் பாஜக கூட்டணியில் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் சேர்ந்தார்.
சரத் பாவரை விட்டு தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சேர்ந்து பாஜக கூட்டணிக்கு அவர் ஆதரவு வழங்கினார். பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு வழங்கி மீண்டும் அங்கு அஜித் பவார் துணை முதல்வரானார். பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரினார். இந்திய தேர்தல் ஆணையம் எம்எல்ஏக்கள், எம்பிக்களின் எண்ணிக்கை அஜித் பவாரிடம் தான் அதிகமாக உள்ளதாக கூறி தேசியவாத காங்கிரஸ் கட்சியையும், அதன் சின்னமான கடிகாரத்தையும் அவரிடம் வழங்கியது.
அதன்பிறகு கடந்த 2024ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அஜித் பவார் கட்சி 41 எம்எல்ஏக்களை பெற்றது. மீண்டும் அஜித் பவார் துணை முதல்வரானார். இதன்மூலம் மகாராஷ்டிராவில் 6வது முறையாகவும், நீண்டகாலம் துணை முதல்வர் என்ற பெருமையை அஜித் பவார் பெற்றிருந்த நிலையில் இன்று அவர் விமான விபத்தில் பலியாகி உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications