"அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்.. சரத் பவாருடன் இணைய இருந்தபோது விபத்து நடந்து இருக்கு!" மம்தா பகீர்
கொல்கத்தா: மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். சரத் பவாருடன் மீண்டும் அஜித் பவார் இணைய இருந்தபோது விமான விபத்து நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத் துணை முதலமைச்சர் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் பயணித்த விமானம், புனேவின் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது. இந்த மோசமான விபத்தில் விமானம் வெடித்துச் சிதறியது. விமானத்தில் பயணித்த அனைவருமே இந்த விபத்தில் உயிரிழந்தனர். பல்வேறு தலைவர்களும் விபத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் பானர்ஜி, அஜித் பவார் மரணம் பேரதிர்ச்சி தருவதாகவும் நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பு என்றும் தெரிவித்தார். மேலும், அரசியல் தலைவர்களுக்கும் 'பாதுகாப்பும் இல்லை' எனக் குற்றம்சாட்டினார். அஜித் பவார் பாஜகவிலிருந்து விலகத் திட்டமிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களையும் அவர் சுட்டிக் காட்டினார்.
அவர் மேலும், "இன்று நடந்த சம்பவம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சரத் பவாருடன் சரத் பவாருடன் மீண்டும் அஜித் பவார் இணைய இருந்தபோது விமான விபத்து நடந்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை இருக்கிறது; வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை. மற்ற புலனாய்வு ஏஜென்சிகள் தங்கள் சுதந்திரத்தை இழந்துவிட்டது என்பதே உண்மை" என்றார்.
மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தல்களுக்காகப் பாராமதிக்குச் சென்று கொண்டிருந்த அஜித் பவார் பயணித்த விமானம் காலை 8.50 மணியளவில் விபத்துக்குள்ளானது. VSR வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் 16 வயது பழைய பாம்பெர்டியர் லியர்ஜெட் 45 மோதலில் முற்றிலுமாக உருக்குலைந்துபோனது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.
காலை 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்ட விமானம், காலை 8.30 மணிக்கு முதல் தரையிறங்க முயன்ற நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததால் அதன் முதல் முற்சி முயற்சியில் தோல்வியடைந்தது. பின்னர் காலை 8.42 மணிக்கு இரண்டாவது முறையாக முயன்றபோது, 8.45 மணியளவில் ரேடாரில் இருந்து மறைந்து, ஓடுபாதை அருகே விபத்துக்குள்ளானது.
மோதலில் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்குப் போனது. அஜித் பவாரின் உடல் அவர் அணிந்திருந்த கடிகாரத்தைக் கொண்டு அடையாளம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications