‘இந்தியா’ கூட்டணியில் சலசலப்பு.. அடித்து ஆடும் அஜித் பவார்! பெரியப்பா சரத் பவார் என்ன செய்யப்போராரோ?
மும்பை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கீழ் தேசியவாத காங்கிரஸ் 2024 மக்களவைத் தேர்தலை சந்திக்கும் என மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்து உள்ளார்.
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணியை அமைத்து வியூகங்களை வகுத்து வருகின்றன. இந்த இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருப்பவர் சரத் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான அவர் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்ட சமயத்தில் அவரது கட்சியே இரு துண்டானது.

அவரது சொந்த சகோதரர் மகனே கட்சியை இரண்டாக உடைத்து பாஜக - சிவசேனா (ஷிண்டே) தரப்புடன் கைகோர்த்து துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அவர்தான் அஜித் பவார். அவருடன் தேசியவாத காங்கிரஸின் மற்றொரு முக்கிய தலைவரான பிரபுல் பட்டேல் உள்ளிட்டோரும் பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டனர்.
கட்சி யாருக்கு என்ற போர் தொடர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் சரத் பவார், காங்கிரஸ், சிவசேனாவுடன் இணைந்து மும்பையில் ஆகஸ்டு 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அஜித் பவார் வாய் திறந்து இருக்கிறார்.
மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, "2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். ஒரு நிலைபாடு எடுக்கும்போது மக்கள் விமர்சிப்பார்கள். ஆனால், அந்த நிலைபாடு எடுத்த பிறகு நமது செயல்பாடுகளால் நாம் பதிலடி தர வேண்டும்." என்று கூறி உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் சரத் பவார், தன்னை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்று அறிவித்துக்கொண்டார். மகாராஷ்டிரா மாநில தலைவராக ஜெயந்த் பாட்டிலை அவர் அறிவித்தார். அப்போது பேசிய அவர், "மீண்டும் மீண்டும் அஜித் பவாருக்கு வாய்ப்புகள் வழங்க மாட்டேன். அவர் அதை எதிர்பார்க்கவும் கூடாது." என்றார்.
25 ஆண்டுகள் பழமையான தேசியவாத காங்கிரஸ் கட்சி தங்களுக்கே சொந்தமானது என்றும், தாங்கள்தான் உரிமையான தேசியவாத காங்கிரஸ் எனவும் சரத் பவார் - அவரது மகள் சுப்ரியா சுலே தரப்பும், அஜித் பவார் - பிரபுல் பட்டேல் தரப்பும் உரிமைகோரி வருகிறார்கள். இது தொடர்பாக சட்டப்போராட்டமும் நடந்து வரும் நிலையில், அடுத்தடுத்து வரும் தேர்தல் முடிவுகள் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications