நாத்தனார் VS அண்ணி.. சரத் பவார் மகளை எதிர்த்து அஜித் பவாரின் மனைவியை களமிறக்கிய பாஜக.. வெல்வது யார்?
மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் இரண்டு அணிகளாக உடைந்துள்ள நிலையில், பாராமதி தொகுதியில் சரத்பவார் மகளை எதிர்த்து அஜித் பவார் மனைவி சுனேத்ரா போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது. எனவே தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் மற்றும் தமிழ்நாடு ஆகியவை ஏப்ரல் 19ம் தேதி தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்து அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலம் மகாராஷ்டிராதான். எனவே மத்தியில் ஆட்சியை கைப்பற நினைக்கும் பாஜக மகாராஷ்டிராவை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.
ஆனால், இந்த முறை பாஜகவுக்கு இங்கு கட்டம் சரியில்லை என்று கருத்துக்கணிப்புகள் கூறியுள்ளன. சிவசேனாவை உடைத்து தற்போது முதலமைச்சராகியிருக்கும் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸை உடைத்து துணை முதலமைச்சராகியிருக்கும் அஜித் பவார் என இவர்கள் இருவரும்தான் இதற்கு காரணம். இவர்கள் இருவருக்குமே உத்தவ் தாக்ரே, சரத் பவார் போன்று மக்களிடையே பெரும் செல்வாக்கு இல்லாததால் தற்போது பாஜக திணறி வருகிறது. அதற்கேற்றாற்போல, இந்தியா கூட்டணி கட்சிதான் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன.
எனவே இந்த கள நிலவரத்தை மாற்ற பாஜக தீவிரமாக பணியாற்றி வருகிறது. குறிப்பாக தேர்தல் பிரசாரத்தில் சரத் பவாரின் படங்கள் பயன்படுத்தப்பட்டன. இது நல்ல யுக்தியாக இருந்தாலும், சரத் பவார் தரப்பு நீதிமன்றத்தை அணுகி இதற்கு தடை வாங்கிவிட்டது. அதேபோல, மறுபுறம் உத்தவ் தாக்ரே அணியின் வேட்பாளருக்கு எதிராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தேசியவாத காங்கிரஸின் பாரம்பரிய தொகுதியான பாராமதி தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து அஜித்பவார் மனைவி சுனேத்ரா போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது நேற்று சரத்பவார் அணியின் சார்பில் 5 வேட்பாளருக்கான பட்டியல் வெளியானது. அதன்படி சரத்பவாரின் சொந்த தொகுதியான பாராமதியில் அவரது மகள் சுப்ரியா சுலே மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். அஜித் பவார் முகாமில் இருந்து அணி மாறி வந்த நிலேஷ் லங்கே எம்எல்ஏ அங்குள்ள அகமதுநகர் தொகுதி வேட்பாளராகவும், அமோல் கோல்ஹே மீண்டும் ஷிரூர் தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். நாசிக் மாவட்டத்தில் உள்ள திண்டோரி தொகுதியில் பாஸ்கர் பாக்ரேவும், வார்தா தொகுதியில் அமர் காலேவும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதில் பாராமதியில் தொகுதியின் வேட்பாளராக சுப்ரியா சுலே அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவருக்கு எதிராக அஜித் பவாரின் மனைவி சுனேத்ராவின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த போட்டி குடும்பத்திற்கான போட்டியில்லை என்றும், சித்தாந்தத்திற்கான போட்டி எனவும் சுனேத்ரா கூறியுள்ளார். மேலும், தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியதற்காக பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
சரத் பவாருடன் அஜித் பவார் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்தார். ஆனால், பாஜவின் தூண்டுதலின் பேரில் அஜித் பவார் சில எம்எல்ஏக்களை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, தனக்குதான் தேசியவாத காங்கிரஸ் சொந்தம் என்று கட்சியை பிரித்துவிட்டார். இப்போது இவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம்












Click it and Unblock the Notifications