மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவர்களால் மட்டும் எப்படி முடியுது.. உலகையே உற்று நோக்க வைத்த “அம்பானி, அதானி” - திடீர்னு என்னாச்சு?

Google Oneindia Tamil News

மும்பை: உலகின் பெரும் பணக்காரர்கள் தொடங்கி இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் வரை பலரது சொத்து மதிப்பு கடந்த 6 மாதங்களில் கடும் சரிவை சந்தித்திருக்கும் நிலையில், அம்பானி, அதானி ஆகியோரது சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்து இருக்கிறது.

2022 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்கள் சர்வதேச பொருளாதாரத்தில் மோசமான காலமாக பார்க்கப்படுகிறது. பெரும் நிறுவனங்கள் கூட கடுமையான இழப்பை சந்தித்து இருக்கின்றன.

உலக நாடுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் டெஸ்டா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க் போன்ற பெரும் பணக்காரர்கள் இரட்டை இலக்கத்தில் இழப்பை சந்தித்து இருக்கின்றனர்.

வாட்ச்மேனிடம் மன்னிப்பு! ரிலையன்ஸ் இளவரசன் ஆகாஷ் அம்பானி! நீதா கொடுத்த பாக்கெட் மணி இவ்வளவு தானா? வாட்ச்மேனிடம் மன்னிப்பு! ரிலையன்ஸ் இளவரசன் ஆகாஷ் அம்பானி! நீதா கொடுத்த பாக்கெட் மணி இவ்வளவு தானா?

பெரு நிறுவனங்களுக்கு இழப்பு

பெரு நிறுவனங்களுக்கு இழப்பு

இவர்களின் சொத்து மதிப்பு மட்டுமே 60 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரிவை சந்தித்து இருக்கிறது. அதேபோல் இந்தியாவின் பாரம்பரிய தொழில் நிறுவனங்களான டாடா, பிர்லா, மகேந்திரா, அசிம் பிரேம்ஜி போன்றவர்களின் பெரும் நிறுவனங்களும் இதே கால கட்டத்தில் பெரும் இழப்பதை சந்தித்து இருக்கின்றன. மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் 11% பங்குகள் சரிவடைந்து இருக்கின்றன.

இந்திய நிறுவனங்களுக்கு எவ்வளவு இழப்பு?

இந்திய நிறுவனங்களுக்கு எவ்வளவு இழப்பு?

மகேந்திரா நிறுவனம் 13 சதவீத இழப்பையும், டாடா நிறுவனம் 15 சதவீத இழப்பையும், பஜாஜ் குழுமம் 23 சதவீத இழப்பையும், ஆதித்யா பிர்லா குழுமம் 28 சதவீத இழப்பையும், L&T நிறுவனம் 32 சதவீத இழப்பையும், விப்ரோ நிறுவனம் 42 சதவீத இழப்பையும் சந்தித்து இருக்கின்றன. தொழில்நுட்ப உலகில் கொடிகட்டிப் பறக்கும் விப்ரோ நிறுவனத்தின் இந்த இழப்பு இந்திய ஐடி துறையில் பெரும் தாக்கத்தையும் வேலை இழப்பையும் ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

கவுதம் அதானி

கவுதம் அதானி

இப்படி இந்தியாவின் பெரும் நிறுவனங்கள் இழப்பில் தத்தளித்துக் கொண்டிருக்க இதிலிந்து 2 இந்திய தொழிலதிபர்கள் மட்டும் தப்பித்து இருக்கின்றனர். ஒருவர் கவுதம் அதானி. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 22.1 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.1.74 ஆயிரம் கோடி) அதிகரித்து இருக்கிறது. அதானியின் முழு சொத்து தற்போது ரூ.7.78 லட்சம் கோடியாக உள்ளது. மதிப்பு மிக்க இந்திய நிறுவனங்களின் வரிசையில் பஜாஜ், பிர்லாவை பின்னுக்கு தள்ளி 3 வது இடத்துக்கு அதானி குழுமம் முன்னேறி இருக்கிறது.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இதிலிருந்து தப்பித்து லாபம் ஈன்ற மற்றொரு தொழிலதிபர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.23,685 கோடி அதிகரித்து முழு சொத்து ரூ.7.34 லட்சமாக உயர்ந்துள்ளது. மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில் ரிலையன்ஸ் 2 வது இடத்தில் இருக்கிறது. ஆனால், இழப்புகளை சந்தித்தாலும் இதில் முதலிடத்தில் எப்போதும் இருப்பது டாடாதான்.

English summary
Ambani and Adani's wealth increased while world top industrialists wealth decreases in first 6 months of 2022: உலகின் பெரும் பணக்காரர்கள் தொடங்கி இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்கள் வரை பலரது சொத்து மதிப்பு கடந்த 6 மாதங்களில் கடும் சரிவை சந்தித்திருக்கும் நிலையில், அம்பானி, அதானி ஆகியோரது சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்து இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X