பெற்றோர் பரிசாக கொடுத்த கார்.. 17 வயது சிறுவன், நண்பனுடன் நள்ளிரவில் ஜாலி பயணம்.. நேர்ந்த துயரம்
மும்பை: பெற்றோர் பரிசாக வாங்கிக் கொடுத்த கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயது சிறுவன், நண்பருடன் உயிரிழந்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர்கள்,18 வயது நிறைவு பெறாத மகன்களுக்கு பரிசாக வாங்கி கொடுக்கக்கூடாத விஷயங்கள் என்றால், அது கார் மற்றும் பைக் தான். குறிப்பாக ஆசையின் மிகுதியில் அவர்கள் விரும்பும் சொகுசு கார்,ரேஸ் பைக் வாங்கி கொடுப்பது,பின்னாளில் அதுவே அவர்களுக்கு எமனாக மாறுகிறது.

பயம் அறியாத அந்த வயதில் பக்குவமே இல்லாமல் வாகனத்தை இயக்கி விபத்தினை சந்திக்கிறார்கள்.இதில் உடல் ஊனம் அல்லது மரணம் வரை ஏற்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் செல்லும் அதிவேகம் மரணத்தை ஏற்படுத்துகிறது. அபூர்வமாகவே காயத்துடன் தப்பிக்கிறார்கள்.
இந்த காலத்தில் அதிக செல்லம் கொடுக்கும் பெற்றோர் எதை கேட்டாலும் வாங்கி தருகிறார்கள், அதற்கான வசதியும் வாழ்வாதாரமும் இருக்கிறது.ஆனால் அதனை பயன்படுத்தி சந்தோஷப்படும் 2கே கிட்ஸ் இளைஞர்களுக்கு அந்த பக்குவம் வளரவில்லை. ஒரு விஷயம் வேண்டும் என்று அடம் பிடித்தால், அதை வாங்கியே ஆகவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பெற்றோர்களும் ஏதாவது செய்து கொள்வார்களோ என்று பயந்து வாங்கி கொடுக்கிறார்கள். அதனால் தான் மோசமான விளைவுகள் ஏற்படுகிறது,
ஒருவர் வங்கி ஊழியர், அவரது அம்மா ஆசிரியை அவர்களுக்கு ஒரே மகன், வீட்டில் கொஞ்சம் வசதி அதிகம். வேண்டிய எல்லாம் வாங்கி கொடுத்தார்கள்.. கடைசியில் 18வயது கூட ஆக நிலையில் சொகுசு பைக் வாங்கி கொடுத்தார்கள். ஆசையாக டிரிப் போன மகன் சில நாட்களிலேயே இறந்து போனான். இப்படி பல சம்பவங்கள் தமிழ்நாட்டிலும் இந்தியா முழுவதும் அடிக்கடி நடந்து வருகிறது,.
அப்படித்தான் மகாராஷ்டிரா மாநிலம் அம்பெர்நாத்தில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனின் பெற்றோர் அவருக்கு அண்மையில் தான் பரிசாக கார் வாங்கி கொடுத்துள்ளனர். அந்த காரை நண்பருடன் ஓட்டிச் சென்றுள்ளார் 17 வயது சிறுவன். மகாராஷ்டிரா மாநிலம் அம்பெர்நாத் அருகே உல்ஷாநகர் அம்பெர்நாத் சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அதிகாலை 2 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 17 வயது சிறுவனும், அவரது நண்பனும் படுகாயம் அடைந்தனர். காரில் சிக்கிய இருவருமே கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டனர். மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில், இருவருமே மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த இளைஞர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் பரிசாக வாங்கிக்கொடுத்த கார், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 17 வயது இளைஞர் நண்பருடன்இறந்த சம்பவம மகாராஷ்டிர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications