சல்மானுக்கு மிரட்டல்! பாபா கொலை! மொத்த வடஇந்தியாவையும் மிரள வைத்த "விவசாயி".. யாரிந்த லாரன்ஸ் கேங்க்
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவரும், மகாராஷ்டிர மூத்த அரசியல்வாதியுமான பாபா சித்திக் (66) சனிக்கிழமை (அக்டோபர் 12) இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராக நீண்டகாலமாக இருந்த பாபா சித்திக், 2004 மற்றும் 2008 க்கு இடையில் காங்கிரஸ்-NCP அரசாங்கத்தில் மாநில அமைச்சராக இருந்தார். ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களுடன் நெருக்கமாக சித்திக் இருந்தார். சல்மான் கானுக்கு இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார்.
பாபா சித்திக், மும்பையின் பாந்த்ரா கிழக்கில் நேற்று முதல்நாள் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். பாந்த்ராவில் (கிழக்கு) நிர்மல் நகரில் உள்ள கோல்கேட் மைதானத்திற்கு அருகிலுள்ள அவரது மகன் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் அலுவலகத்தில் பாபா சித்திக் இருந்தார். எம்எல்ஏ அலுவலக நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்த பின் இரவு 9.30 மணியளவில் அலுவலக வளாகத்தில் இருந்து பாபா சித்திக் வெளியேறினார்.

வெளியே வந்த சில நிமிடங்களில் பாபா சித்திக்கை ஒரு கும்பல் சுற்றி வளைத்துள்ளது. கைக்குட்டையால் முகத்தை மறைத்திருந்த மூன்று பேர், தங்கள் காரில் இருந்து இறங்கி பாபா சித்திக்கை சுட்டு உள்ளனர்.
சித்திக் கொலையில் தொடர்புடைய மூன்று துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதை மும்பை போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த குழு மற்றும் அவர்கள் குற்றச் செயல்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.
லாரன்ஸ் பிஷ்னாய் யார்?:
லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தத்தரன்வாலி கிராமத்தைச் சேர்ந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர்.. தொடக்கத்தில் அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் பார்த்து வந்துள்ளார். பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானின் பல பகுதிகளில் உள்ள விவசாய இனமான பிஷ்னோய் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பிறந்த ஊரிலேயே பிஷ்னோய் 12 ஆம் வகுப்பு வரை படித்தார், பின்னர் கல்லூரிக் கல்வியைத் தொடர 2010 இல் சண்டிகருக்கு மாறினார். DAV கல்லூரியில் சேர்ந்த பிறகு, அவர் மாணவர் அரசியலில் தீவிரமாக பணியாற்றினார் . இதன் மூலம் 2011 மற்றும் 2012 க்கு இடையில் பஞ்சாப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் (SOPU) தலைவராக ஆனார்.
லாரன்ஸ் பிஷ்னோய் மீதான முதல் எஃப்ஐஆர் கொலை முயற்சிக்காக பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2010 இல் இன்னொரு தாக்குதல் வழக்கில் அவர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டது பிப்ரவரி 2011 இல், அவர் மீது தாக்குதல் மற்றும் செல்போன் கொள்ளை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மூன்று வழக்குகளும் மாணவராக அவர் இருந்த போதே பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஆகும்.
இறுதியில், ஜஸ்விந்தர் சிங் என்ற ராக்கி, என்ற ரவுடி இவரின் குழுவில் இணைந்தார். அதன்பின்தான் கொஞ்சம் கொஞ்சமாக லாரன்ஸ் குழு வளர தொடங்கியது. இக்குழுவினர் ராஜஸ்தானின் சில பகுதிகளிலும், ராஜஸ்தான்-பஞ்சாப் எல்லையில் அமைந்துள்ள ஸ்ரீ கங்காநகர் போன்ற நகரங்களிலும், அதே போல் பாரத்பூர் போன்ற நகரங்களிலும் மாணவர் அரசியல் என்ற போர்வையில் ரவுடியிஸத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல குற்றப் பின்னணி கொண்ட ராக்கி, மே 2016 இல் இமாச்சலப் பிரதேசத்தின் பர்வானூ அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு ஜெய்பால் புல்லர் என்ற இன்னொரு கேங்க் லீடர் பொறுப்பேற்றார். இதற்கு பதிலடியாக ஜூன் 2020 இல் கொல்கத்தாவில் புல்லர் பாப்பா கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதான் கேங்க் வாரை உருவாக்கியது. இதன் மூலம் மாறி மாறி இந்த கேங்க் மோதிக்கொண்டது. இது மற்ற குழுவிற்கும் பரவ பெரிய கேங்க் வாராக இது மாறியது. இதன் மூலம் லாரன்ஸ் மீது 15க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் பதிவானது.
தற்போது, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ், சிறைக்குள் இருந்து தனது கும்பலை இயக்கி வருவதாக நம்பப்படுகிறது.
பாதுகாப்பு: முன்னாள் அமைச்சரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடிகர் சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மென்ட்டுக்கு வெளியே பாதுகாப்பு கூட்டப்பட்டு உள்ளது.
கைது செய்யப்பட்ட இரு குற்றவாளிகளான ஹரியானாவைச் சேர்ந்த கர்னைல் சிங் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் ஆகியோர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். போலீஸ் விசாரணையின் போது, தற்போது தாங்கள் சிறையில் உள்ள பிரபல ரவுடியான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று குற்றப்பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர் ஏற்கனவே சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். அவர்தான் இப்போது பாபா சித்திக் கொலை வழக்கிலும் மாட்டி உள்ளார். இந்த கொலை வழக்கை விசாரிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக அரசியல், மத கோணத்தையும் ஆய்வு செய்ய உள்ளதாக மும்பை காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் காரணமாகவே சல்மான் கான் வீட்டிற்கு பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. சல்மான் கான் நேற்று இரவு லீலாவதி மருத்துவமனைக்குச் சென்று தனது சித்திக் குடும்பத்தைச் சந்தித்தார். பாபா சித்திக் குடும்பத்தினரிடம் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications