அமிதாப் பச்சன் உடல்நிலை எப்படி உள்ளது? குடும்பத்திற்கே கொரோனா பரவியது எப்படி? வெளியான தகவல்கள்
மும்பை: கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகியோர் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
77 வயதாகிறது அமிதாப்பச்சனுக்கு. அபிஷேக் பச்சன் வயது 44. இவர்கள் இருவரும் கொரானா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டதாக கடந்த 11ம் தேதி டுவிட்டரில் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து, மும்பை, நானாவதி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

வழக்கமான சிகிச்சைகள்
இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள ஒரு தகவலில், மருத்துவ ரீதியாக இருவருமே உடல்நிலையும் சீராக இருந்து வருகிறது. வழக்கமான சிகிச்சை இப்போதைக்கு போதுமானது. கூடுதல் அல்லது மேல் சிகிச்சை அவர்களுக்கு தேவை கிடையாது. முதல்கட்ட மருந்துகளை அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் உடல் ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதவிர சப்போர்ட் தெரபி சிகிச்சையும் கொடுக்கப்படுகிறது.

நலமோடு உள்ளார் அமிதாப் பச்சன்
ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ அடிப்படை தேவைகளும் இருவர் உடலிலும் சரியாக இருக்கிறது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் பச்சன் மனைவியான 46 வயதாகும், ஐஸ்வர்யா ராய் மற்றும் இந்த தம்பதியின் 8 வயது மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டு சிகிச்சையில் ஐஸ்வர்யா ராய்
அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். அதேநேரம் இவர்களை விடவும் அமிதாப்பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் வைரஸ் லோடு அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

எப்படி பரவியது கொரோனா
அபிஷேக் பச்சன் சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றுக்காக டப்பிங் பேசுவதற்கு ஸ்டுடியோ சென்றுள்ளார். இதன் மூலமாகத்தான் அவர் குடும்பத்தாருக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்க கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை மாநகரத்தில் தான் இந்தியாவிலேயே அதிகப்படியான கொரானா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications