தாவூத்துடன் அமிதாப் கைகுலுக்கும் போட்டோ வைரல்.. அபிஷேக் பச்சன் விளக்கம்!
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமுடன் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. தாவூத்துடன் அமிதாப் கைகுலுக்குபடியான புகைப்படத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. ஆனால் இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் தாவூத் இல்லை என அபிஷேக் பச்சன் விளக்கமளித்துள்ளார்.
1993-ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புகளை தாவூத் திட்டமிட்டு நடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பல்வேறு நாச வேலைகளுக்கு மூளையாக இருந்துள்ள இவரை இன்டர்போல் போலீஸ் தேடி வருகிறது.
இவர் கராச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதை பாகிஸ்தான் மறுக்கிறது. 2011-ஆம் ஆண்டு கராச்சி, பாகிஸ்தானில் நடைபெற்ற இவரின் மகனின் திருமணத்தில் பாகிஸ்தான் உயரதிகாரிகள், உளவுத்துறையினர் வந்ததாக தகவல் உள்ளன.

புகைப்படம்
உலகில் அதிசக்திவாய்ந்த மனிதர்களில் இவருக்கு 52 ஆவது இடத்தை போர்ப்ஸ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் நிழல்உலக தாதாவான இவர் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுடன் கைகுலுக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படத்தை விமர்சித்து பலர் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் முதல்வர்
இந்த நிலையில் இந்த புகைப்படத்தை அபிஷேக்கிற்கு அனுப்பிய ஒருவருக்கு அமிதாப்பின் மகன் அபிஷேக் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹிந்தியில் கூறுகையில் சகோதரா, இந்த புகைப்படத்தில் இருப்பது தாவூத் அல்ல. எனது தந்தை அமிதாபும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சங்கரராவ் சவானும் ஆவர் என பதிலளித்துள்ளார்.

ஷீட்டிங்கில் அமிதாப்
அபிஷேக்கின் பதிலை பார்த்த அந்த நபர் தனது போஸ்ட்டை டெலிட் செய்துள்ளார். கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் தற்போது முற்றிலும் குணமடைந்து ஷீட்டிங்கிற்கு திரும்பியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அமிதாப் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறார்.

அமிதாப் பச்சன்
கவுன் பனேகா க்ரோர்பதி 12 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது அவர் முக பாதுகாப்பு கவசம் அணிந்திருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமிதாப் பச்சன் அறிவுறுத்தியுள்ளார்.

டிஸ்சார்ஜ்
அமிதாப்பிற்கு கடந்த ஜூலை மாதம் கொரோனா உறுதியானது. அவர் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என ஆகஸ்ட் 2-ஆம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications