சுவாமி தரிசனம் செய்ய வந்த ஆனந்த் அம்பானி.. மாஸ் காட்டிய முகேஷ் மகன்.. எப்படி வந்தார்?
மும்பை: மும்பையில் பாஜக பிரமுகர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்ய 14 கோடி மதிப்பிலான ரோல்ஸ் ராய்ஸ் காரில் வருகை தந்தார்.
ரோல்ஸ் ராய்ஸ் எனும் கார்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த கார் மற்ற சொகுசு கார்களை விட விலை குறைவாக இருந்தாலும் இந்த கார்களுக்கு மவுசு அதிகம்தான்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு. வாகனம் வாங்குவதில் அவரவர் வசதிக்கேற்ப மாறுபடும். சிலருக்கு சைக்கிள் வாங்கும் கனவு, சிலருக்கு டிவிஎஸ் 50, சிலருக்கு பெரிய வண்டிகள், இன்னும் சிலருக்கு ஜாவா பைக்குகள், ஹார்லி டேவிட்சன் இப்படி பட்டியல் நீளும்.
டூவிலர் வைத்திருப்போருக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை, வசதியானவர்களுக்கு வெளிநாட்டு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் அம்பானி குடும்பத்தினர் ஏராளமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு அந்த காரின் மீது தீராத ஆசை எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.
அவர்களது வீட்டில் cullinan என்ற மாடல் கார்கள் மட்டும் நான்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் ஏற்பாடு செய்திருந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளார் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி. அவர் வந்தது நான்கு கல்லினன் கார்களில் ஒன்றுதான்.
தேர் போல கார் என்போமே அது இந்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு கச்சிதமாக பொருந்தும். ஆனந்த் அம்பானி வந்த காரின் விலை ரூ7 கோடி. ஆனால் அதில் அவர் பல மாற்றங்களை செய்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்திடம் இருந்தே அந்த காரை பெற்றார். இந்த காரின் விலை ரூ 14 கோடியாகும். கார் தங்க நிறமும் சில்வர் நிறமும் கலந்து இருக்கிறது.
அதிலிருந்து நீல நிற பைஜாமா அணிந்து கொண்டு வந்தார் ஆனந்த் அம்பானி, அங்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வழிபட்டபடியே உள்ளே செல்கிறார். அவரை அந்த முன்னாள் எம்எல்ஏ வரவேற்கிறார். அவருக்கு ஒரு நினைவு பரிசையும் அந்த மாஜி வழங்கினார். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஏராளமானோர் முண்டி அடிக்கிறார்கள். ஆனால் அவரை சுற்றி எஸ்கார்டுகள் பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications