திமிராக விமர்சித்த நெட்டிசன்! ஆனந்த் மஹிந்திரா தந்த "தரமான" பதில்! இதை எதிர்பார்க்கலையே.. டிரெண்டிங்
மும்பை: ஆனந்த் மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட மின்சார கார்கள் குறித்து நெட்டிசன் ஒருவர் மிகக் காட்டமான விமர்சனத்தை முன்வைத்து இருந்தார். அந்த விமர்சனத்தைப் புறக்கணிக்காமல் ஆனந்த் மஹிந்திரா அதற்குச் சரியான பதிலை அளித்துள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த போஸ்ட் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் இப்போது மின்சார கார்களில் ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் மஹிந்திரா BE6e மற்றும் XEV 9e ஆகிய புதிய எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தியது.

இதற்கிடையே அந்த காரை விமர்சித்து நெட்டிசன் ஒருவர் விமர்சித்து இருந்தார். சுஷாந்த் மேத்தா என்ற அந்த நபர் மிகவும் காட்டமான வார்த்தைகளில் மஹேிந்திரா கார்கள் குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.
கடும் விமர்சனம்: அதில் அவர், "புதிய கார்களை வெளியிடும் முன்பு, முதலில் ஏற்கனவே உங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள கார்களில் உள்ள சிக்கலைச் சரி செய்யுங்கள்.. சர்வீஸ் சென்டர் பிரச்சினை, உதிரப் பாகங்கள், ஊழியர்கள் நடத்துக் கொள்ளும் விதம் ஆகியவற்றை சரி செய்யுங்கள். பெரிதாக எந்தவொரு ஆராய்ச்சியும் செய்யாத நபர்களுக்கு மட்டுமே உங்கள் கார்கள் ஏற்றதாக இருக்கும். ஹூண்டாய் நிறுவனத்தின் கார்களுக்கு அருகே கூட உங்கள் கார்களால் வர முடியாது.
கார் டிசைனில் மோசமான டேஸ்ட் உங்கள் டீமுக்கு இருக்கிறதா.. அல்லது உங்களுக்கே மோசமான டேஸ்ட் இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், ஒன்று மிகப் பெரிய சைஸில் கார் வேண்டும் என விரும்புவோருக்கு மட்டுமே உங்கள் கார் ஏற்றதாக இருக்கும். அதேநேரம் நம்பகத்தன்மை மற்றும் தரத்தில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.. நீங்களும் டாடாவும் அடுத்த மாருதி மற்றும் ஹூண்டாயாக இருப்பீர்கள் என நினைத்தேன். ஆனால், எனக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது" என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனந்த் மஹிந்திரா: அவர் காட்டமான கருத்துகளால் விமர்சித்து இருந்த நிலையில், வேறு யாராவதாக இருந்து இருந்தால் அதைப் புறக்கணித்து இருக்க மாட்டார்கள். சிலர் பிளாக் கூட செய்து இருப்பார்கள். ஆனால், ஆனந்த் மஹிந்திரா அப்படிச் செய்யவில்லை. மாறாக மஹிந்திராவில் சிக்கல் இருக்கிறது என்றாலும் 1990ரள் முதல் தொடர் முயற்சியால் நிறுவனம் தூரம் வளர்ந்து இருக்கிறது என்பதைப் பொறுமையாக விளக்கினார்.
தனது ட்விட்டரில் அவர், "நான் 1991இல் இந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது, அப்போது தான் உலகமயமாக்கலை இந்தியா ஏற்றுக் கொண்டு இருந்தது. அப்போது ஒரு சர்வதேச கன்சல்டன்சி நிறுவனம் கார் பிஸ்னஸில் இருந்தே மொத்தமாக வெளியேறும்படி எங்களை அறிவுறுத்தியது. ஏனென்றால் உலகமயமாக்கல் காரணமாகப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளே வரும். இதனால் அவர்களுடன் போட்டியிட முடியாது என்று அந்த நிறுவனம் கருதியது. ஆனால், இப்போது 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னும் நாங்கள் மார்கெட்டில் இருக்கிறோம். பல நிறுவனங்களுக்குப் போட்டியாக இருக்கிறோம்.
You’re right, Sushant.
— anand mahindra (@anandmahindra) December 1, 2024
We have a long way to go.
But please consider how far we have come.
When I joined the company in 1991, the economy had just been opened up.
A global consulting firm strongly advised us to exit the car business since we had no chance, in their view, of… pic.twitter.com/xinxlBcGuV
உங்களின் திமிர்: எங்கள் மீதான சந்தேகம், அவநம்பிக்கை, அல்லது உங்கள் போஸ்டில் இருப்பது போன்ற திமர்தனம் தான் எங்களை மேலும் மேலும் ஓட வைக்கிறது. இன்னும் நாங்கள் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது. அதுவரை தொடர்ந்து தேவையான மாற்றங்களைச் செய்வோம் என்பதே எங்கள் மந்திரம். உங்கள் கருத்துக்கு நன்றி" என்று போஸ்ட் செய்துள்ளார்.
பொதுவாக இதுபோல கடுமையான வார்த்தைகளைக் கொண்டு நெட்டின்சன்கள் போஸ்ட் போட்டால் அதைத் தொழிலதிபர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், ஆனந்த் மஹிந்திரா தனது ஸ்டைலில் ரிப்ளை கொடுத்து இருக்கிறார். அவரது இந்த போஸ்ட்டிற்கு பிறகு அந்த நெட்டிசன் தனது முந்தைய பதிவை டெலிட் செய்துவிட்டார்.
டெலிட் செய்த நெட்டிசன்: மேலும், அவர், "உங்கள் ரிப்ளை மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்கள் விமர்சனத்தை ஆக்கப்பூர்வமாக எடுத்ததில் மகிழ்ச்சி. உங்கள் டீம் அழைத்துப் பேசிய பிறகு நான் ட்வீட்டை நீக்காயுள்ளேன். நான் சில கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதா நினைக்கிறேன்" என்று சொல்லி முந்தைய பதிவையும் டெலிட் செய்துள்ளார்.
-
பில்லை கேட்ட நோயாளி.. ரூ.1 லட்சத்தில் இருந்து சரிபாதியாக குறைந்த கட்டணம்! ஏமாந்துடாதீங்க மக்களே -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு!












Click it and Unblock the Notifications