இரண்டு போர்களை கடந்திருக்கிறேன் - முதுகு சில்லிட்டுப் போகும்.. அனுபவம் பகிரும் ஆனந்த் மஹிந்திரா!
மும்பை: இரண்டு போர்களை என்னுடைய சிறு வயதில் கடந்திருக்கிறேன் என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்றுடன் மூன்று நாட்கள் ஆகியுள்ளது. தற்போது போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு தரப்பிலும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. போர் நிறுத்தப்பட வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவை வற்புறுத்தி வருகின்றன.
ரஷ்யாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில் இந்த நாடுகள் மீதும் ரஷ்யா பொருளாதார தடையை விதித்துள்ளது.

உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்து, உக்ரைனின் பல இடங்களைக் கைப்பற்றி வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவியைக் கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து முன்னேறி வருகிறது. உக்ரைன் லிவிவ் பகுதியில் அபாய சங்கு ஒலிக்கும் வீடியோவைப் பகிர்ந்து அவரது அனுபவங்களைப் பதிவிட்டிருக்கிறார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.
|
ஆனந்த் மஹிந்திரா
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில், ''இரண்டு போர்களை என்னுடைய சிறு வயதில் கடந்திருக்கிறேன். 1965 மற்றும் 1971 வருடங்களில் மும்பையில் அபாய சங்கு ஒலிக்கும் போது முதுகு சில்லிடும். அந்த உணர்வை என்னால் நினைவுகூர முடிகிறது. அபாய சங்கின் சத்தம் எனக்கு பயமுறுத்தக்கூடிய அந்தக் கனவுகளை எழுப்புகிறது. போர்களில் இருந்து இந்த உலகம் எதையும் கற்று கொண்டதாகத் தெரியவில்லை" என்று ட்வீட் செய்துள்ளார்.
|
போர்
ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய ட்வீட்டில் 1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த போர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், போர் சமயத்தில் நாட்டு மக்கள் தங்கள் நாட்டைப் பாதுகாக்க களமிறங்கியிருப்பது மிகப்பெரிய சக்தியாக பார்க்கப்படுகிறது. இது அணுசக்தியை விடவும் பெரியது.
இப்படிப்பட்ட சமயத்தில் படையெடுப்பு சாத்தியம், ஆனால் ஆக்கிரமிப்பு சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார்.

ஆயுதம் ஏந்தும் மக்கள்
உக்ரேன் மீது ரஷ்யா போர் நடத்திவரும் நிலையில், உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டுக்காக துப்பாக்கி ஏந்தி ரஷ்யப் படையை எதிர்க்க துணிந்துவிட்டார்கள். இதைத்தான் ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், உக்ரேனியர் ஒருவர் பேசுகையில், ''ரஷ்யர்கள் இதை நிறுத்தப்போவதாக தெரியவில்லை. இதனால் நாங்களும் போராட வந்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications