இன்னொரு ஐபிஎல் சீசன் மகிழ்ச்சி.. அப்படியே அந்த அரசியல்.. தோனியை கோர்த்துவிடும் ஆனந்த் மகிந்திரா
மும்பை: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி அரசியலில் களம் காண வேண்டும் என தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் எனும் கிரிக்கெட் தொடர் லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆதரவை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வந்தது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இறுதி போட்டி நடந்தது.
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெல்ல 10 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது ரசிகர்கள் கடவுளை வேண்டி கொண்டனர். ஒரு சிலர் சமயபுரத்து ஆத்தா பாத்து செய் என பக்தி பரவசத்தில் வேண்டிக் கொண்டனர். ஜெயித்தவுடன் சாமியாடினர். சிஎஸ்கே அணி வெற்றிக்கு சிறிய குழந்தை முதல் வயதான பாட்டி வரை கொண்டாடி மகிழ்ந்தனர். ஜடேஜாவின் திறமையை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
அப்போது ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரியை அடித்தார். இதையடுத்து சிஎஸ்கே அணி 5ஆவது முறையாக கோப்பையை வென்றது. டீம் வெல்லும் வரை கண்களை மூடிக் கொண்டு அமைதியாக இருந்த தோனி, வென்றதுமே ஓடி போய் ஜடேஜாவை தூக்கி வைத்துக் கொண்டு மகிழ்ச்சியில் கொண்டாடினார்.
இந்த வெற்றியை அடுத்து கிரிக்கெட் மைதானத்திலேயே சென்னை அணி வீரர்கள் கொண்டாடினர். இந்த கோப்பை நேற்றைய தினம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு திநகரில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு இந்தியா, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்றதை தொடர்ந்து அணியின் கேப்டன் தோனி ரசிகர்களின் அன்புக்காக, தான் இன்னும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாக தெரிவித்திருந்தார். தோனியின் விருப்பத்திற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா பரபரப்பான ட்வீட்டை போட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தோனியின் முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் தோனி அரசியலில் களம் காண வேண்டுமென நான் விரும்புகிறேன். பாஜகவின் தேசிய துணைத் தலைவர் பைஜயெந்த் ஜெய் பாண்டாவின் தலைமையிலான என்சிசி ஆய்வுக் குழுவில் தோனியுடன் நான் பணியாற்றியிருக்கிறேன் என ஆனந்த் மகிந்திரா தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications