மொத்தம் 17 மாடிகள்.. ரூ.3,700 கோடி ஆடம்பர பங்களாவை பறிகொடுத்த அனில் அம்பானி.. அமலாக்கத்துறை அதிரடி
மும்பை: பிரபல தொழிலதிபரான அனில் அம்பானிக்கு சொந்தமான மும்பையில் உள்ள ரூ.3,700 கோடி மதிப்புள்ள 17 மாடிகள் கொண்ட 'அபோட்' எனும் ஆடம்பர குடியிருப்பை அமலாக்கத்துறை அதிரடியாக பறிமுதல் செய்துள்ளது.

நம் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவர் தற்போதும் கொடிகட்டி பறக்கிறார். ஆனால் இவரது உடன் பிறந்த சகோதரர் அனில் அம்பானி பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அனில் அம்பானி ரிலையன்ஸ் குரூப் தலைவராக இருந்தார். மேலும் ஏராளமான தொழில்களை செய்து வந்த நிலையில் நஷ்டம் அடைந்தார். அவர் மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. வங்கிகளில் பணம் வாங்கி அதனை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
அதாவது வங்கியில் கடன் வாங்கி அதனை பிற நிறுவனங்களுக்கு மாற்றி நிதி முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 2017 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை யெஸ் வங்கியில் இருந்து பெறப்பட்ட ரூ.3 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார். அதனை அனில் அம்பானி பிற நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.
அதோடு இதுபற்றி விஷயத்தை வெளியே சொல்லாமல் இருக்க யெஸ் வங்கியில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் புகார் உள்ளது. இதுபற்றியும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக சிபிஐ 2 வழக்குகளை பதிவு செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்றம் இருந்ததால் அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் நுழைந்தது. ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் என்று 35-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அதிரடி சோதனை மேற்கொண்டது.
இதுதொடர்பாக அனில் அம்பானியிடம் முதற்கட்டமாக கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 2வது கட்ட விசாரணைக்கு அனில் அம்பானி அழைக்கப்பட்டுள்ளார். விரைவில் அனில் அம்பானி அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார்.
இந்நிலையில் தான் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அனில் அம்பானியின் 17 மாடி கொண்ட, 'அபோட்' என்று பெயரிடப்பட்ட மும்பை ஆடம்பர பங்களாவை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டடம்
மும்பையின் பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ளது. இதன்மூலம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 15,700 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications