அனுஷ்கா காலை மேல பிடிச்சு.. அசர வைத்த கோலி.. ஆனால் எதுக்கு இப்படி ரிஸ்க்!
மும்பை: இந்தி நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா தலைகீழாக நின்று யோகா செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்காக ரசிகர்கள் அவரை பாராட்டி வந்தாலும், கர்ப்ப காலத்தில் இதுபோன்ற ஆபத்தான பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என அவருக்கு பல்வேறு தரப்பினர் கணடனம் குவிந்து வருகிறது.

பிரபல இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியும் கடந்த 2017 ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அனுஷ்கா ஷர்மா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். ஜனவரி மாதம் குழந்தை பிறக்குமென கோலி கூறியுள்ளார். குழந்தை பிறக்கும் நேரம் மனைவி அருகில் இருந்து கவனித்து கொள்வதற்காக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் தொடரில் மட்டும் விளையாடி விட்டு நாடு திரும்ப உள்ளார்.
இந்தநிலையில் கர்ப்பமாக உள்ள அனுஷ்கா சர்மா ஒரு ஆபத்தான செயலை செய்துள்ளார். அதாவது தலைகீழாக நின்று சிரஸாசனம் செய்யும் ஒரு படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்துள்ளார். 'இந்த பயிற்சி மிகவும் கடினமான ஒன்றாகும்" எனவும் அவர் அந்த படத்தின் கீழ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் "யோகா எனது வாழ்க்கையில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, நான் கர்ப்பகாலத்திற்கு முன்பு செய்த சில ஆசனங்களை தவிர்த்துவிட்டு, பல வருடங்களாக செய்து வரும் இந்த சிரஸாசனத்தை, தற்போது செய்துள்ளேன். எனது கணவர், கூடுதல் பாதுகாப்பிற்காக நான் பேலன்ஸ் செய்ய துணை புரிகிறார். இந்த பயிற்சி எனது யோகா குருவின் வீடியோ மூலம் கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது. இந்த கர்ப்பகாலத்திலும், நான் பயிற்சியை தொடர்வதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்" என கூறியுள்ளார்.
கர்ப்பகாலத்திலும் தலைகீழாக நின்று பயிற்சி செய்ததை ரசிகர்கள் அனுஷ்கா சர்மாவை பாராட்டி வருகின்றனர். இதற்கு பல தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது. கர்ப்பகாலத்தில் டாக்டரும், யோகா மாஸ்டரும் அருகில் இல்லாதபோது, இது மாதிரியான பயிற்சிகள் செய்வதை தவிர்க்கவேண்டும். இதுபோன்ற பயிற்சிகளில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அது குழந்தையை பாதித்துவிடும் என பலரும் அவருக்கு கண்டனமும், அறிவுரையும் கூறி வருகின்றனர்.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications