மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நான்தான் அப்பவே சொன்னேனே.. டைமிங்காக நினைவுபடுத்தும் நிதின் கட்கரி

Google Oneindia Tamil News

Recommended Video

    In early morning twist | தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார் !

    மும்பை: மகாராஷ்டிரா அரசியல் இப்படித்தான் போகும் என்று, நான்தான் அப்பவே சூசகமாக சொன்னேனே, என்பது போல ஒரு வார்த்தையை பழையபடியும் கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

    மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவிஸ் இன்று அதிகாலை திடீரென முதல்வராக பதவியேற்க, துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித் பவார் பதவியேற்றார்.

    Anything can happen in cricket, politics: Nitin Gadkari

    ஆனால் அஜித் பவாருடன், 10 அல்லது 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர் என்று சரத் பவார் கூறி வருகிறார்.

    இந்த நிலையில்தான், மும்பையில் பேட்டியளித்த நிதின்கட்கரி, "கிரிக்கெட்டிலும் அரசியலிலும் எதுவும் நடக்கலாம் என்று நான் முன்பு கூறியிருந்தேன், இப்போது நான் எதற்காக சொன்னேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.

     105 ஐ விட 56 பெரியது.. வாதிட்ட கணித மேதைகள்.. நல்ல பாடம் கிடைச்சிருச்சு.. எச். ராஜா பலே! 105 ஐ விட 56 பெரியது.. வாதிட்ட கணித மேதைகள்.. நல்ல பாடம் கிடைச்சிருச்சு.. எச். ராஜா பலே!

    சுமார் 10 நாட்கள் முன்பாகவே, நிதின் கட்கரி இப்படி ஒரு வார்த்தையை தெரிவித்திருந்தார். அரசியல் என்பது கிரிக்கெட் விளையாட்டு போன்றுதான், கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் ஆட்டத்தின் போக்கு மாறும், அதேபோல அரசியலிலும் எப்போது சூழ்நிலை எப்படி மாறும் என்பதை எளிதில் கணிக்க முடியாது என்று கட்கரி அப்போது கூறியிருந்தார்.

    கட்கரி நினைத்தால், பாஜக-சிவசேனா பிரச்சினையை சரி செய்து கூட்டணி ஆட்சியை மலர செய்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து மட்டத்திலும் இருந்தது. ஆனால் கட்கரி இந்த விவகாரத்தில் ரொம்பவே மூக்கை நுழைக்காமல் விலகியே இருந்தார். ஆனால் அரசியலும், கிரிக்கெட்டும் ஒன்று என அவர் கூறியபடியே இருந்தார். அதற்கான அர்த்தம் இப்போது புரிந்திருக்கிறது மக்களுக்கு.

    English summary
    Union minister Nitin Gadkari today said I had earlier said anything can happen in cricket and politics, now you can understand what I meant.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X