போதைப்பொருள் வழக்கில் கைதான.. ஆர்யன்கான் ஜாமீன் மனு தள்ளுபடி.. மும்பை நீதிமன்றம் உத்தரவு!
ஆர்யன்கானுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கூடி உள்ளது
மும்பை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. ஆர்யன்கான் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த சனிக்கிழமை போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு போதை விருந்து நடப்பது உறுதி செய்யப்பட்டது..
புள்ளிகள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோரும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்... இதுகுறித்த தகவல் கிடைக்கவும், விரைந்து சென்ற போதை தடுப்பு பிரிவு போலீஸார் கப்பலில் தீவிர சோதனையை மேற்கொண்டனர். ஷாருக் கானின் மகன் இதில் சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.

விசாரணை
அப்போது போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்... ஆவாட்ஸ்ஆப் சேட் அடிப்படையில் ஆர்யான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றன.

மும்பை கோர்ட்
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டி உள்ளதால், ஆர்யான் கானை அக்டோபர் 13 வரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு மும்பை கோர்ட் அனுமதி கோரியது... இதையடுத்து, ஆர்யான் கானை அக்டோபர் 7-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது... பிறகு ஆர்யான் கான் உள்பட 8 பேரை மும்பை கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினார்கள்.

விசாரணை
அப்போது ஆர்யான் கான் உள்ளிட்டோரை அக்டோபர் 11 வரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அனுமதி கோரியது. ஆனால் இதற்கு அனுமதி மறுத்த கோர்ட் ஆர்யான் கான் உள்பட 8 பேரை 14 நாள் நீதிமன்ற காவலிலில் அனுப்பியது. இதனிடையே, ஆர்யான் கான், தன்னுடைய வழக்கறிஞர் சதீஷ் மனேஷிண்டே மூலம் ஜாமீன் கோரி விண்ணப்பித்துள்ளார்... கைதான 8 பேருமே தனித்தனியாக ஜாமீன் கோரி மனு அளித்துள்ளனர்..
Recommended Video

ஜாமீன் மனு தள்ளுபடி
அந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நேற்றே நடக்கும் என்று எதிர்பாக்கப்பட்டது.. ஆனால் விசாரணை நடக்கவில்லை. இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், ஆர்யான் கானுக்கு ஜாமீன் தந்துவிடக்கூடாது என்று தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த வழக்கில் வெளிநாட்டில் உள்ள நபர்களுக்கும் தொடர்பு உள்ளதால் அதுபற்றி விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறியது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஆர்யன்கான் ஜாமீன் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆர்யன்கான் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications