ஆர்யான் கானுக்கு எதிராக ஸ்ட்டிராங்காக சிக்கிய முக்கிய ஆதாரம்.. ஷாரூக் மகன் கைது!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஷாரூக் கான் மகன் ஆர்யான் கான் போதை பொருள் பயன்படுத்தியதை அம்பலப்படுத்தும் அளவுக்கு போதை பொருள் தடுப்பு போலீஸாரிடம் (Narcotics Control Bureau) ஒரு முக்கிய ஆதாரம் சிக்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Recommended Video

    Shahrukh Khan மகன் Aryan போதை பொருள் Party நடத்தி கைதாகியுள்ளார் | Gowri Khan

    மும்பை கடலோரத்தில் இருந்த கோவாவைச் சேர்ந்த சொகுசு கப்பலில் போதை பொருள் புழங்கியதாக போதை பொருள தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையின் பேரில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் கான் உள்பட தொழிலதிபர்களின் மகன்கள், மகள்கள் என 8 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணை நடத்தப்படும் இடத்திற்கு ஷாரூக் கான் வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. என்சிபி அதிகாரிகளும் பயணிகளை போல் டிக்கெட் வாங்கிக் கொண்டு கப்பலின் உள்ளே சென்றனர்.

    பார்ட்டி

    பார்ட்டி

    அங்கு சிறிது நேரத்தில் பலர் தங்களிடம் இருந்த போதை பொருளை உட்கொள்ள தொடங்கியதும் மாறுவேடத்தில் இருந்த என்சிபி அதிகாரிகள் அங்கிருந்தவர்கள் சுற்றி வளைத்தனர். இதில் ஆர்யான் கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தனது பெயரில் யாரோ ஒருவர் ரேவ் பார்ட்டிக்கு சென்றதாகவே கூறிவந்தார்.

    போனில் ஆதாரம்

    போனில் ஆதாரம்


    இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட அவரது போனை ஆய்வு செய்ததில் ஆர்யான் கான் ஏற்கெனவே பல முறை போதை பொருளை உட்கொண்டதாகவும் அதை ஆர்டர் செய்து வாங்கியதாகவும் அவரது போன் மெசேஜ்கள் ஆதாரங்களாக சிக்கியுள்ளன. இதுகுறித்து என்சிபி அதிகாரிகள் கூறுகையில் இந்த கப்பலில் ரேவ் பார்ட்டி நடப்பதாக 15 நாட்களுக்கு முன்னர் தகவல் கிடைத்தது.

    பாதுகாப்பான ஆபரேஷன்

    பாதுகாப்பான ஆபரேஷன்

    அதன் பேரில் மிகவும் பாதுகாப்பாக இந்த ஆபரேஷனில் இறங்கினோம். வழக்கமாக நடைபெறும் பார்ட்டி இதுவல்ல என்ற தகவலும் கிடைத்தது. இதனால் நிச்சயம் இந்த பார்ட்டியில் போதை பொருட்கள் விநியோகிக்கப்படலாம் என தெரியவந்தது. அதன்பேரிலேயே பயணிகள் போல் மாறு வேடத்தில் சென்று விசாரணை நடத்தினோம் என்றார்கள்.

    ஆர்யான் கான் கைது

    ஆர்யான் கான் கைது

    ஆர்யான் கான் கைது? இந்த பார்ட்டியில் மும்பை பாலிவுட் பிரபலங்கள் இருப்பார்கள் என என்சிபி அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த சம்பவத்தில் எத்தனை பெரிய பாலிவுட் நடிகர், பிரபலங்களுக்கு தொடர்பிருந்தாலும் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் அடிப்படையில் ஆர்யான் கானை போதை தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+