அவுரங்கசீப் எனும் கொடுங்கோலனை உண்மையான முஸ்லிம் ஆதரிக்க கூடாது- பற்ற வைத்த மகா. துணை முதவ்லர் ஷிண்டே
மும்பை: முகலாயப் பேரரசன் அவுரங்கசீப் ஒரு கொடுங்கோலன்; சர்வாதிகாரி; இந்திய முஸ்லிம்கள் யாரும் அவுரங்கசீப்பை ஆதரித்து போராட்டம் நடத்தக் கூடாது என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை அகற்ற கோரி பெரும் வன்முறைகள் வெடித்துள்ள நிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் இந்த மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்பின் கல்லறை, மகாராஷ்டிரா மாநிலம் குல்தாபாத்தில் உள்ளது. இந்துத்துவா அமைப்பினர் இந்த கல்லறையை அகற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். மராத்திய மாமன்னன் சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர் அவுரங்கசீப் என்பதால் இந்த எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான ஆவணப் படங்கள், வெப் சீரிஸ், சினிமாக்களிலும் சிவாஜியின் மகனை கொலை செய்த அவுரங்கசீப் என்பதே பதிய வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மகாராஷ்டிரா மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் அபு ஆஸ்மியோ, அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசினார். இதனால் மராத்திய அமைப்புகள் மற்றும் இந்துத்துவா இயக்கத்தினர் கொந்தளித்து போயினர். மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்கசீப் கல்லறையை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என போராடி வருகின்றனர். நாக்பூரில் இந்த போராட்டம் பெரும் வன்முறையாகவும் வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே அவுரங்கசீப் கல்லறையை இடித்து தரைமட்டமாக்கினால் ரூ25 லட்சம் சன்மானம்- பரிசுத் தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்பை இந்துத்துவா அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் பின்னணியில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசுகையில், அவுரங்கசீப் ஒரு கொடுங்கோலன்; இந்திய நாட்டின் எதிரி. மகாராஷ்டிரா மக்களின் எதிரி; அவுரங்கசீப் சர்வாதிகாரி. மகாராஷ்டிராவில் மாவீரன் சத்ரபதி சிவாஜியின் பெருமையைக் கட்டிக் காப்பாற்றவே போராட்டம் நடைபெறுகிறது. அவுரங்கசீப்பை ஆதரிப்பவர்கள் வரலாற்றை படிக்க வேண்டும்; சாவா திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றார்.
#WATCH | Mumbai: On Nagpur violence, Maharashtra Deputy CM Eknath Shinde says, "...I will also say that even a true Muslim of the country will not support Aurangzeb. Aurangzeb was the enemy of Maharashtra, the enemy of the country...Aurangzeb is a traitor. The protestors are… pic.twitter.com/Z6oGFMkvGZ
— ANI (@ANI) March 18, 2025
ஆனால் மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ஓவைசி, கடந்த சில வாரங்களாகவே மகாராஷ்டிரா முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை வெறுப்பை விதைத்து வருகின்றனர். முதல்வரும் அமைச்சர்களும் தங்களது பொறுப்பு என்ன என்பதை கூட உணராமல் இருக்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் அவுரங்கசீப்பின் உருவபொம்மையை எரிக்கின்றனர். குரான் வாசகங்கள் எழுதப்பட்ட துணிகளை எரிக்கின்றனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் பின்னர்தான் நாக்பூரில் வன்முறைகள் ஏற்பட்டன என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications